March 4, 2021, 8:43 am

உரிமை மீட்பு போராட்டத்தில் குதிக்கும் முஸ்லிம் சகோதரர்கள்!!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிகோரும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி மட்டக்களப்பு தாளங்குடா நகரில் இருந்து ஆரம்பித்து ஒட்டமாவடி நகரை அடைந்த நிலையில் பெருமளவான முஸ்லிம் மக்களும் இணைந்து கொண்டிருந்தனர்.

2ஆவது நாள் பேரணி இன்று காலை மட்டக்களப்பு தாளங்குடாவிலிருந்து ஆரம்பித்து ஆரையம்பதி, காத்தான்குடி, மட்டக்களப்பு, ஏறாவூர், செங்கலடி, வாழைச்சேனை வழியாக ஒட்டமாவடி நகர எல்லைக்குள் நுழைந்த போது முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளருமாகிய எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் பெருமளவான முஸ்லிம் மக்களும் இணைந்து கொண்டிருந்தனர்.

0

இதன்போது எங்கே எங்கே உறவுகள் எங்கே, எரிக்காதே எரிக்காதே ஜனாசாக்களை எரிக்காதே, எங்கள் நிலம் எமக்கு வேண்டும், வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், வேண்டும் வேண்டும் உரிமை வேண்டும், திரும்பிப் பார் திரும்பிப் பார் சர்வதேசமே திரும்பிப் பார், வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம், ஐ.நா சபையே தலையிடு, வழங்கு வழங்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்கு போன்ற முழக்கங்களை பேரணியில் பங்கேற்றுள்ள தமிழ் பேசும் மக்கள் ஒன்றாக ஓங்கி ஒலித்து வருகின்றனர்.

இன்றைய பேரணியில் வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசிய கட்சிகளை சார்ந்தவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், எம்.ஏ.சுமந்திரன், செல்வராசா கஜேந்திரன் கோ.கருணாகரன், எஸ்.ஸ்ரீதரன், த.கலையரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், இளைஞர்கள் உள்ளிட்டவர்கள் இன ஒற்றுமையுடன் பங்கேற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

fgg

வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல் நிலங்கள் அபகரிப்பு, கொரோனாவினால் மரணமடையும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்வதற்கு எதிர்ப்பு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளப் பிரச்சினை அடங்கலாக அரச அடக்குமுறைகள் போன்ற விடயங்களை முன்னிறுத்தி அவற்றை கண்டித்தும் நீதி கோரியும் தீர்வு கேட்டும் இந்த போராட்டம் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகின்றது.

y

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மூன்று நாள் தொடர் போராட்ட பேரணி நேற்று பொலிஸாரின் தடைகளை தாண்டி அம்பாறை – பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொத்துவிலில் இருந்து நேற்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட பேரணி இன்று மாலை முல்லைதீவை சென்றடைந்து சனிக்கிழமை மாலை பொலிகண்டியை சென்றடையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

மற்றொரு பொறிக்குள் சிக்கும் இலங்கை

-என்.கண்ணன்“சீனா இலங்கையிடம் யுவான்களை கடனாக கொடுத்து, டொலர்களாகத் திருப்பி எடுத்துக் கொள்கிறது. இது சீனா தனது நாணயத்தை டொலர்களாக மாற்றிக் கொள்வதற்கு கையாளுகின்ற ஒரு தந்திரம்”வெளிநாட்டு நாணயக் கையிருப்பு இல்லாமலும், வெளிநாட்டுக் கடன்களை...

அகில தனஞ்சயவின் ஹெட்ரிக் சாதனை

இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளரான அகில தனஞ்சய இன்று அதிகாலை ஆன்டிகுவாவில் நடைபெற்ற மேற்கிந்தியத்தீவுகளுடனான இருபதுக்கு : 20 கிரிக்கெட் போட்டியில் ஹெட்ரிக் சாதனையை புரிந்துள்ளார்.ஆன்டிகுவாவில் உள்ள கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில்...

மட்டக்களப்பில் முகக்கவசம் அணியாத பலர் பொலிஸாரினால் கண்டுபிடிப்பு

மட்டக்களப்பு நகரிற்குள் முகக்கவசம் அணியாமல் நடமாடிய பலர் பொலிஸாரினால் புதன்கிழமை மாலை (03) கண்டுபிடிக்கப்பட்டனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலையில் தொற்றுநோயிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் சுகாதார...

Stay Connected

6,571FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

மற்றொரு பொறிக்குள் சிக்கும் இலங்கை

-என்.கண்ணன்“சீனா இலங்கையிடம் யுவான்களை கடனாக கொடுத்து, டொலர்களாகத் திருப்பி எடுத்துக் கொள்கிறது. இது சீனா தனது நாணயத்தை டொலர்களாக மாற்றிக் கொள்வதற்கு கையாளுகின்ற ஒரு தந்திரம்”வெளிநாட்டு நாணயக் கையிருப்பு இல்லாமலும், வெளிநாட்டுக் கடன்களை...

அகில தனஞ்சயவின் ஹெட்ரிக் சாதனை

இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளரான அகில தனஞ்சய இன்று அதிகாலை ஆன்டிகுவாவில் நடைபெற்ற மேற்கிந்தியத்தீவுகளுடனான இருபதுக்கு : 20 கிரிக்கெட் போட்டியில் ஹெட்ரிக் சாதனையை புரிந்துள்ளார்.ஆன்டிகுவாவில் உள்ள கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில்...

மட்டக்களப்பில் முகக்கவசம் அணியாத பலர் பொலிஸாரினால் கண்டுபிடிப்பு

மட்டக்களப்பு நகரிற்குள் முகக்கவசம் அணியாமல் நடமாடிய பலர் பொலிஸாரினால் புதன்கிழமை மாலை (03) கண்டுபிடிக்கப்பட்டனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலையில் தொற்றுநோயிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் சுகாதார...

யாழில் நூதனமாக கொள்ளையிடும் குழு !

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவரின் தலைமையில் நூதன கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.குறித்த கொள்ளைக் கும்பல் முச்சக்கர வண்டி சாரதிகளை இலக்கு வைத்தே கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றது.“யாழ்ப்பாணம் புறநகர் பகுதிகளான காக்கைதீவு,...

கிரிக்கெட் வீரர்கள் உட்பட 7 பேருக்கு கொவிட் தொற்று: பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிகள் பிற்போடப்பட்டன

ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.சுப்பர் லீக் போட்டியில் பங்குபற்றியுள்ள அணிகளின் உரிமையாளர்களுடனான காணொளி சந்திப்பொன்றில் கலந்துகொண்டதையடுத்து, இப்போட்டியில்...