கல்மடுக்குளத்தின் கீழ்பயிர்செய்கையிலிடுபட்டிருக்கும் விவசாயிகளின் பலரது வயல்கள் பங்கஸ் நோய்த்தாக்கத்துக்குள்ளகிவரும் நிலையில் தற்பொழுது மீண்டும் ஒரு நோய்த்தாக்கம் ஏற்ப்பட்டுள்ளது .அறுவடைக்கு இன்னும் 15 நாட்கள் உள்ள நிலையில் இப்படி ஓர் நோய்த்தாக்கம் ஏற்ப்பட்டுள்ளது .முன்னர் 10 வருடங்களிற்கு முன்னர் 501என அழைக்கப்படும் நெல்லினத்திற்கும் இப்படியான நோய்த்தாக்கம் ஏற்ப்பட்டதன் காரணமாக அந்த நெல்லினமே அழிந்து போய்யுள்ளது. அதே போன்று தற்பொழுது சம்பா இனத்திற்கு இந்த நோய்த்தாக்கம் ஏற்ப்பட்டுள்ளதன் காரணமாக மீண்டும் இந்த நெல்லினத்தை பயன்படுத்த முடியுமா ?எனவும் கவலையிட்டுள்ளதுடன் இந்நோய்த்தாக்கம் காரணமாக பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு அரசாங்கம் எந்தஒரு நஸ்டயீட்டையும் எமக்க வழங்கவில்லை எம்மையும் இனி வரும் காலங்களிளாவது எமக்கும் நஸ்டயீட்டை அரசாங்கம் பெற்றுத்தரவேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்தனர்



