February 25, 2021, 8:31 am

இலங்கையின் வரலாற்றை தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு விளக்கமளித்த சிறீதரன் எம்.பி

இலங்கையின் வரலாற்றை தொல்லியல் திணைக்களத்த அதிகாரிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெளிவுபடுத்தினார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இன்று முல்லைத்தீவு குமிழமுனை குருந்தூர் மலைக்கு விஜயம் செய்தனர். குறித்த விஜயத்தின் போது தொல்லியல் திணைக்களத்தினால் குறித்த பகுதியில் செய்யப்படும் ஆய்வுகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. அப்போது பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் இவ்விடத்தில் இருந்த தமிழர்களின் வழிபாடு செய்கின்ற சூலத்தை யார் அகற்றியது என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கேட்க தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரி தாம் அவற்றை அகற்றவில்லை எனக் கூறியபோது இராணுவம் தானே இதை அகற்றியது என்றபோது தமக்கு தெரியாது என்றார்கள். இந்த அகழ்வை எந்தக்காலத்தோடு ஒப்பிட்டு மேற்கொள்கிறீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் வினவியபோது பொலனறுவை காலத்தினை மையமாகக் கொண்டு எனக் கூறியபோது இலங்கையிலே விஜயன் வருகையின் பின்னரே இலங்கைக்கு சிங்கள பௌத்தர்களின் வரலாறுகள் தொடங்குவதாகவும் அதற்கு முன்னரே இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளதாகவும் பஞ்ச ஈச்சரங்கள் அதற்கு சான்றுகள் எனவும் சிலாபத்தில் முன்னேஸ்வரம் மன்னாரில் திருக்கேதீச்சரம் திருகோணமலையில் திருக்கோணேஸ்வரம் மாத்தறையில் தொண்டேஸ்வரம் யாழ்பாணத்தில் நகுலேஸ்வரம் போன்றவையும் இருந்ததாகவும் தமிழர்களே இங்கு பூர்விகம் குடிகள் என்றும் குறிப்பிட்டார் அப்போது அவர் அதிகாரி அவ்வாறான வரலாறு தனக்கு தெரியாது என்றபோது உங்களுக்கு தெரிந்த ஒரே வரலாற்று நூல் மகாவம்சம் மாத்திரமே என்றார் பின்னர் அனைவரும் அவ்விடம் விட்டகன்றனர் குறித்த விஜயத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் ரவிகரன் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுரேன் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் போன்றோரும் கலந்து கொண்டனர்

Related Articles

தொப்பையை குறைக்க வேண்டுமா? இரவு நேரத்தில் இந்த பானத்தை குடிங்க !

பொதுவாக இன்றைய ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி பெரும் பிரச்சினையாக தொப்பை பிரச்சினை உள்ளது. இதனை குறைக்க பல வழிகளில் முயற்சி செய்து கொண்டு வருகின்றனர்.என்னத்தான் தொப்பையைக் குறைக்க உடற்பயிற்சிகள் பெரிதும் உதவி...

நடுகை மாதாந்த சஞ்சிகை வெளியீட்டு விழா

அம்பலம் குழுமத்தின் வெளியீடான செல்வி.ஜனகா நீக்கிலாஸ் அவர்களின் நடுகை மாதாந்த சஞ்சிகையின்விழா எதிர்வரும் 28.02.2021, ஞாயிற்றுக்கிழமை, பி.ப 4.00 மணிக்கு, கரைச்சி பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.ஈழத்து இலக்கிய வரலாற்றில் தனி...

யாழில் கடத்தப்பட்ட சிறுமிகள் மீட்பு !

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் 14 மற்றும் 15வயதுடைய இரண்டு சிறுமிகளை சாவகச்சேரி பொலிசார் நேற்று புதன்கிழமை மீட்டுள்ளனர்.மேலும் குறித்த சிறுமிகளை அவர்களுடைய பாதுகாவலர்களிடம் இருந்து கவர்ந்து...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

தொப்பையை குறைக்க வேண்டுமா? இரவு நேரத்தில் இந்த பானத்தை குடிங்க !

பொதுவாக இன்றைய ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி பெரும் பிரச்சினையாக தொப்பை பிரச்சினை உள்ளது. இதனை குறைக்க பல வழிகளில் முயற்சி செய்து கொண்டு வருகின்றனர்.என்னத்தான் தொப்பையைக் குறைக்க உடற்பயிற்சிகள் பெரிதும் உதவி...

நடுகை மாதாந்த சஞ்சிகை வெளியீட்டு விழா

அம்பலம் குழுமத்தின் வெளியீடான செல்வி.ஜனகா நீக்கிலாஸ் அவர்களின் நடுகை மாதாந்த சஞ்சிகையின்விழா எதிர்வரும் 28.02.2021, ஞாயிற்றுக்கிழமை, பி.ப 4.00 மணிக்கு, கரைச்சி பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.ஈழத்து இலக்கிய வரலாற்றில் தனி...

யாழில் கடத்தப்பட்ட சிறுமிகள் மீட்பு !

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் 14 மற்றும் 15வயதுடைய இரண்டு சிறுமிகளை சாவகச்சேரி பொலிசார் நேற்று புதன்கிழமை மீட்டுள்ளனர்.மேலும் குறித்த சிறுமிகளை அவர்களுடைய பாதுகாவலர்களிடம் இருந்து கவர்ந்து...

இன்றைய ராசி பலன்கள் 25/02/2021

மேஷம்மேஷம்: பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும்...

கொரோனா தொற்றுக்குள்ளான 458 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 458 பேர் நேற்று (24) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,009 இலிருந்து...