பிக் பாஸ் போட்டியாளர் தர்ஷன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யக்கோரிய, நடிகை சனம் ஷெட்டியின் மனு மீது பொலிஸார் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிக் பாஸ் போட்டியாளர் தர்ஷன் மற்றும் நடிகை சனம் ஷெட்டியின் காதல் விவகாரம் அண்மையில் சர்ச்சையை கிளப்பியது.
தர்ஷன் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக அடையாறு பொலிஸ்நிலையத்தில் சனம்க்ஷெட்டி புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் தர்ஷன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நடிகை சனம் ஷெட்டியின் பிக் பாஸ் போட்டியில் பங்கேற்று வருவதால், இந்த பிரச்சினை முடிந்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால் சனம் தரப்பில் நீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, சனம் மீது தாக்குதல் நடத்திய தர்ஷன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நடிகை சனம் ஷெட்டியின் மனு மீது 3 வாரத்திற்குள் பொலிஸார் பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.