January 15, 2021, 5:25 pm

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் …

எதிர்வரும் 25ஆம் திகதி நாட்டின் அனைத்துப் பாடசாலைகளிலும் 11ஆம் வகுப்புக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் நேற்று (04) கல்வி அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் ஆரம்பப் பாடசாலைகள் எதிர்வரும் 11ஆம் திகதி திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணம் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பாடசாலைகள் இவ்வாறு எதிர்வரும் 25ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக தெரிவித்த அமைச்சர்; தனிமைப்படுத்தலுக்கு முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இடம்பெறும் தினம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க மார்ச் முதலாம் திகதி முதல் மார்ச் 11ம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறும். அந்த பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக பதினோராம் வகுப்பு கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது மிக முக்கியமாகும். அதற்கிணங்கவே அது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம்.

மேல் மாகாணம் மற்றும் ஏனைய மாகாணங்களில் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ள பொலீஸ் பிரிவுகள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் பதினோராம் வகுப்பு கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை ஜூன் மாத இறுதிப்பகுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

சுகாதாரத் துறையினரின் வழிகாட்டல்களை பின்பற்றியே சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும்பாலான பாடசாலைகளில் மூன்றில் இரண்டு மடங்கு பாடங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. எஞ்சியதை இவ்வருடம் முதலாம் தவணையில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

புலத்தின் ஊற்று நிறுவனத்தின் மூலம் கற்றல் உபகரணம் வழங்கல்

தாயகத்தில் உள்ள இனங்கானப்பட்ட மாணவர்களுக்கு சுவிஸ் நாட்டில் உள்ள தாயக உறவுகளின் பங்காளிப்புடன் புலத்தின் ஊற்று அமைப்பு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளது.பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்களின் வேண்டுகோளின்...

பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு!

பிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி கற்கும் யாழ்ப்பாணத்தை பார்வீகமாக கொண்ட , இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ்.தீவகம், அல்லைப்பிட்டி- மண்டைதீவுப் பகுதிகளைச் மாணவிகளே இவ்வாறு இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.பிரான்ஸில் மருத்துவத்துறையில்...

நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம்!

நல்லூர் பிரதேச சபையின் இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13  உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.நல்லூர் பிரதேச சபையின் 2ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் தவிசாளர் ப.மயூரனால் சபையில்...

Stay Connected

6,160FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

புலத்தின் ஊற்று நிறுவனத்தின் மூலம் கற்றல் உபகரணம் வழங்கல்

தாயகத்தில் உள்ள இனங்கானப்பட்ட மாணவர்களுக்கு சுவிஸ் நாட்டில் உள்ள தாயக உறவுகளின் பங்காளிப்புடன் புலத்தின் ஊற்று அமைப்பு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளது.பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்களின் வேண்டுகோளின்...

பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு!

பிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி கற்கும் யாழ்ப்பாணத்தை பார்வீகமாக கொண்ட , இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ்.தீவகம், அல்லைப்பிட்டி- மண்டைதீவுப் பகுதிகளைச் மாணவிகளே இவ்வாறு இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.பிரான்ஸில் மருத்துவத்துறையில்...

நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம்!

நல்லூர் பிரதேச சபையின் இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13  உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.நல்லூர் பிரதேச சபையின் 2ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் தவிசாளர் ப.மயூரனால் சபையில்...

6 பிள்ளைகளின் தாய் ரயிலில் விழுந்து மரணம்

ஹட்டன் நாவலப்பிட்டிக்கான சேவையில் ஈடுபடும் இரயிலின் முன்னால் பாய்ந்து ஆறு பிள்ளைகளின் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹட்டனில் இடம்பெற்றுள்ளது.ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் தோட்டத்தை சேர்ந்த ஆறு பிள்ளைகளின்...

இந்தோனீசியாவில் பாரிய நிலநடுக்கம்: சுலவேசி தீவில் ஏற்பட்ட 6.2 அதிர்வில் பலர் மரணம்

இந்தோனீசியாவின் சுலவேசி தீவில் 6.2 அளவில் ஏற்பட்ட கடும் நில நடுக்கத்தில் டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.நிலநடுக்கத்தால் பாதியளவு இடிந்த ஒரு மருத்துவமனையில் பல நோயாளிகளும், ஊழியர்களும் சிக்கிக்கொண்டிருக்கலாம் என்று செய்திகள்...