January 26, 2021, 11:25 am

பதவி இழக்கின்றாரா ரஞ்சன்?

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உச்ச நீதிமன்றம் நான்கு வருடம் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

நேற்றைய தினம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிபதிகளான சிசிர டீ. ஆப்ரூ மற்றும் பிரீதீ பத்மன் சூரசேன, விஜித் மலல்கொட நீதிபதிகள் குழாத்தினால் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பை வெளியிட்ட நீதிபதிகள் குழு தலைவர் சிசிர டீ. ஆப்ரு தெரிவிக்கையில்,

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக சட்ட மா அதிபரினால் பிரதிவாதியான ரஞ்சன் ராமநாயக்க மீது நீதிமன்ற அவமதித்தல் குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக குற்றவாளியாக தீர்ப்பிடப்படுகின்றாரென்றும் அவருக்கு 04 வருட கடூழியச்சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற விமானப்படை வீரரான சுனில் பெரேராவினால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாகவே ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் திகதி அலரி மாளிகையில் அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சுவார்தைகளையடுத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க, நாட்டின் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் பலரும் மோசடிக்காரர்களெனத் தெரிவித்துள்ளார்.

மேற்படி கருத்துக்களின் அடிப்படையில் ரஞ்சன் ராமநாயக்க, நாட்டின் நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளார் எனவும் அவர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளாரெனவும் அவருக்கு எதிரான மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க, நேற்று பல்லன்சேனையிலுள்ள தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இந்நிலையில் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் இல்லாமல் போகலாம் என அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

Related Articles

நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது! – தலதா அத்துகோரல

யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று  (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், குறிப்பாக உள்துறை...

டெல்லியை நோக்கி ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் படையெடுக்கும் விவசாயிகள்!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கான டெல்லி மாநில எல்லையில் 60 நாள்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுக்கும் போராடும்...

சசிகலாவின் நிலைப்பாட்டை பொறுத்து என்னுடைய நிலைப்பாடு இருக்கும் – கருணாஸ்

புதுக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படையின் 12 கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் நான்...

Stay Connected

6,385FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது! – தலதா அத்துகோரல

யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று  (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், குறிப்பாக உள்துறை...

டெல்லியை நோக்கி ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் படையெடுக்கும் விவசாயிகள்!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கான டெல்லி மாநில எல்லையில் 60 நாள்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுக்கும் போராடும்...

சசிகலாவின் நிலைப்பாட்டை பொறுத்து என்னுடைய நிலைப்பாடு இருக்கும் – கருணாஸ்

புதுக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படையின் 12 கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் நான்...

சிக்கிம் எல்லையில் இந்திய ராணுவத்துடன் கைகலப்பு..

கடந்த ஆண்டு மே மாதம் காஷ்மீரை ஒட்டிய லடாக் எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்தனர். கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான்...

விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தது யார்?

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் இணைந்து விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தவரே சுரேஷ் பிரேமச்சந்திரன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள...