January 26, 2021, 5:23 am

நினைவுத்தூபி யாரின் உத்தரவின் பேரில் இடித்தழிக்கப்பட்டது?

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய உணர்வுடன் அன்று தொட்டு இன்று வரை செயற்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களை மீண்டும் சீண்டிப் பார்க்கும் வகையில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட அராஜகச் செயலே இது. இதை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இறுதிப்போரில் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அங்கு உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அவர்களின் உறவுகள் ஆகியோரின் நினைவாகவே யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால் நினைவுத்தூபி அமைக்கப்பட்டது. இதன் புனிதத்தன்மையைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய பல்கலைக்கழக நிர்வாகம்இ இந்தத் தூபியை இரவோடிரவாக இடித்தழித்துள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பாதுகாப்புத் தரப்பு உட்பட்ட பல்வேறு தரப்புக்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாகவே நினைவுத்தூபியை இடித்தோம் என்று துணைவேந்தர் கூறியுள்ளார்.

ஆனால், நினைவுத்தூபியை அகற்ற முடிவெடுத்தது பல்கலைக்கழக துணைவேந்தர்தான் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.

நினைவுத்தூபி இடிக்கப்பட்டமைக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். அப்படியெனில் இந்த நினைவுத்தூபி யாரின் உத்தரவின் பேரில் இடித்தழிக்கப்பட்டது?

ஒட்டுமொத்த தமிழர்களையும் பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இந்தச் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை நடைபெற வேண்டும். உரிய தரப்பினர் பொறுப்புக்கூற வேண்டும்.

இந்தச் செயல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது தற்போதைய நிலைமையில் தேவையற்ற செயல்.

ஒரு குழப்பத்தை – ஒரு புதிய பிரச்சினையைத் திட்டமிட்டு உருவாக்குகின்ற செயல்.

என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தது யார்?

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் இணைந்து விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தவரே சுரேஷ் பிரேமச்சந்திரன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள...

சுரேஸ் விபச்சாரி: கஜேந்திரகுமார் சாடல்?

இலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதான ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரது அறிக்கையினை வரவேற்றுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். ...

மீண்டும் புனரமைக்கப்படும் கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையம்

கிளிநொச்சிக்கான மத்திய பேரூந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் கடந்தசில ஆண்டுக்களாக கைவிடப்பட்டிருந்த நிலைியில் தற்போது மீண்டும் பணிகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் 16,365 867 ரூபா நிதிஒதுக்கீட்டில் கட்டுமானப் பணிகள் மீளவும்...

Stay Connected

6,384FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தது யார்?

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் இணைந்து விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தவரே சுரேஷ் பிரேமச்சந்திரன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள...

சுரேஸ் விபச்சாரி: கஜேந்திரகுமார் சாடல்?

இலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதான ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரது அறிக்கையினை வரவேற்றுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். ...

மீண்டும் புனரமைக்கப்படும் கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையம்

கிளிநொச்சிக்கான மத்திய பேரூந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் கடந்தசில ஆண்டுக்களாக கைவிடப்பட்டிருந்த நிலைியில் தற்போது மீண்டும் பணிகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் 16,365 867 ரூபா நிதிஒதுக்கீட்டில் கட்டுமானப் பணிகள் மீளவும்...

மட்டக்கிளப்பில் பிள்ளையானின் மற்றுமோர் சர்சையை ஏற்படுத்தியுள்ள கள்ள உறுதி விவகாரம்

கச்சேரிக்கு பக்கததில் உள்ள Guest House ( மதுபான விருந்தகம் ) பிள்ளையான் ஆட்சி உறுதி எழுதியிருக்கிறார்.இந்த இடத்தினை Lankan Rest House என்னும் பெயரில் இப்போது பிள்ளையானே நடாத்தி வருகிறார்.இது கச்சேரிக்கும்...

தனிமைப்படுத்தல் நிலையங்களில் நடக்கும் கொடுமை!

பொகவந்தலாவை, மோரா தேயிலை தோட்டத்தில் செயற்படும் கொரோனா தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைகளுக்காக சென்றுள்ளவர்கள் காலை உணவை நிராகரித்துள்ளனர்.தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தில் நடத்தி செல்லப்படும் நிலையத்தில் வழங்கப்படும் உணவுகள், மனித...