யாழ்.பல்கலைக்கழக வளாகத்திலிருந்து அகற்றப்பட்ட நினைவுத்தூபி அமைக்கப்பட்டிருந்த இடத்தில் இன்று மீண்டும் அடிக்கல் நாட்டப்படும் என்று மாணவர்களுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன
சுபநேரத்தில் அடிக்கல் நாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி வழங்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களும் போராட்டத்தினை கைவிடுவதற்கு இணங்கியிருப்பதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை,
யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ஜமுனானந்தா மாணவர்களைச் சந்தித்து அவர்களின் உடல் நிலை குறித்து பார்த்தபோது நால்வரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.