யாழ் பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுதூபி இடித்து தகர்த்தப்பட்டுள்ளமை தொடர்பில் திரைப்பட நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
கொத்துக்கொத்தாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை மறக்க முடியாது. சரணடைய வந்தவர்களையும் சாகடித்தது மறவாது. முள்ளிவாய்க்கால் நினைவிடம் என்பது வெறும் கட்டுமானம் கிடையாது. வரலாறு மாறாது. நினைவுச் சின்னத்தை இடித்தவர்களே, நினைவுகளை என்ன செய்வீர்கள்?
எனக் கேட்டுள்ளார்.