யாழ்ப்பாண பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுதூபி உடைப்பு சம்பந்தமாக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா அவர்களை எமது நகர்வு இணையத்தளம் தொடர்பு கொண்டு வினவிய போது உயர் மட்டத்திலிருந்தும்,பொலிஸ் DIG மற்றும் பல்கலைக்கழக ஆணைக்குழுவின் சிபாரிசு மற்றும் பணிப்பின் பெயரிலேயே தான் தூபி இடிக்கப்பட்டதாகவும்
பல்கலைக்கழகங்கள் ஆணைக்குழு கோரினால் மட்டுமே பதவி விலகுவேன் என கூறினார்.மேலும்
தானே இடிப்பதற்குரிய ஆணையை வழங்கியதாகவும் பல்கலையில் 55%மாணவர்கள் சிங்களவர்களே எனவும் அவர்களை திருப்திப்படுத்துவதற்காகவே தான் இதை செய்ததாகவும் தெரிவித்தார்.
முன்னாள் துணைவேந்தர் இதற்கு இடமளிக்காமையினாலேயே பதவி இறக்கப்பட்டார்.மற்றும் தாமே பொலிஸ் மற்றும் இராணுவத்தை வரவளைத்ததாகவும் கூறினார்.இத்தூபியை உடைப்பதற்டான திட்டத்தை தானே வகுத்ததாகவும் இத்தூபி உடைப்பது பற்றி தான் முதலே அறிந்திருந்ததாகவும் அவர் எமது நகர்வு செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலே கூறினார்.
https://youtu.be/l2X9dJyzmaQ