January 25, 2021, 2:14 pm

நாம் ஒருபோதும் மக்களுக்கு மோசடி செய்யமாட்டோம்-பிரதமர் மஹிந்த

தேர்தலை எதிர்பார்த்து எந்தவொரு விடயமும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. நாம் அந்த மோசடி செயலை மக்களுக்கு செய்ய மாட்டோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான விவாதத்தின்போது, பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விவாதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,“இந்த வரவு செலவுத் திட்டத்தை நாம் முன்வைக்கும் போது 70 பில்லியன் ரூபாயை கொரோனா தொற்றுக்கென செலவிட்டிருந்தோம்.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு இடம்பெறும் இன்றைய நாளவில் நாம் 82 பில்லியன் ரூபாயை கொவிட் ஒழிப்பிற்காக செலவிட்டுள்ளோம். டிசம்பராகும்போது அது 90 பில்லியனை விட அதிகமாகும். அதனால் இது போன்ற பாரிய சவால்களை ஏற்றுக்கொண்டு முன்வைக்கப்படும் வரவு செலவுத் திட்டமாக இதனை குறிப்பிட வேண்டும்.

நாம் உலகத்துடன் எந்தளவிற்கு பிணைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர சரியான தருணம் தான் இது. உலகில் இடம்பெறும் விடயங்கள் அரசியல், பொருளாதாரம், சுகாதார அடிப்படையில் இடம்பெறும் விடயங்கள் எம்மை எந்தளவு பாதிக்கும் என்பதை புரிந்துக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் இதுவாகும்.

உலகில் இடம்பெறும் விடயங்கள் இந்த சபையை கூட கடுமையாக பாதிக்கும் என நான் கூற வேண்டும். இதுபோன்ற உலக நெருக்கடிகளின்போது வெளி உலகத்தை சார்ந்துள்ள நாடுகள் உதவியற்ற நிலைக்கு தள்ளப்படும்.

நாம் நமது பொருளாதாரத்தை தேசிய மட்டத்தில் கட்டியெழுப்பியிருந்தால் இதுபோன்ற நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க கூடியதாயிருந்திருக்கும். அதுதான் கொவிட்-19 எமக்கு கற்பித்த பாடம். நாம் ஏற்கனவே இந்நிலையை புரிந்துக் கொண்டிருந்தோம்.

அதனாலேயே சுபீட்சத்தின் நோக்கு தேசிய பொருளாதாரம் குறித்தும், தேசிய விவசாய வளர்ச்சி தொடர்பிலும் எண்ணினோம். இந்த வரவு செலவுத் திட்டம் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.

மற்றைய வரவு செலவுத் திட்டங்களில் காணப்பட்ட நோக்கமல்ல இந்த வரவு செலவுத் திட்டத்தில் காணப்படுவது. மற்றைய வரவு செலவுத் திட்டங்களின் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை ஈடுசெய்வதே முதன்மையாகும். எனினும் இந்த வரவு செலவுத் திட்டம் உள்ளூர் விவசாயிகள், உள்ளூர் தொழிலதிபர்கள், உள்ளூர் உற்பத்தியாளர்கள் ஆகியோரை மேம்படுத்தி உலகை எதிர்கொள்ளக்கூடிய மற்றும் இதுபோன்ற பாதிப்புகளுக்கு முகங்கொடுக்கக் கூடிய நாட்டை கட்டியெழுப்புவதற்காகவே முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளது.

சுபீட்சத்தின் நோக்கில் விவசாயத்துறை குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம். நமக்கான உணவை நாமே உற்பத்தி செய்வது நமது நாட்டை கட்டியெழுப்புவதற்கான சிறந்த வழியாகும். இவ்வளவு காலமும் ஒரு கிலோகிராம் நெல்லிற்கு 32 ரூபாயே செலுத்தப்பட்டது. நாம் அதனை 50 ரூபாய் வரை அதிகரித்தோம். உரத்தை இலவசமாக நிவாரணமாக பெற்றுக் கொடுத்தோம். இவ்வாறு செய்ததன் ஊடாக விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பானது.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் பொதுமக்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை என எமது விமர்சகர்கள் குற்றஞ்சாட்டினர். எனினும், நாம் ஒருபோதும் வெறுமனே பணத்தை செலவிடும் திட்டங்களை ஆரம்பிக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எதிர்வரும் தேர்தலை எதிர்பார்த்து எந்தவொரு விடயமும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. நாம் அந்த மோசடி செயலை மக்களுக்கு செய்ய மாட்டோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை கோட்டாபயவின் ஆணைக்குழு காப்பாற்றாது! –

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை ஆராயும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு தற்போது அமைத்துள்ள ஆணைக்குழு நாட்டுக்கு எந்த விதத்திலும் கைகொடுக்கப்போவதில்லை. இது வெறுமனே கண்துடைப்பு நாடகம்...

இலங்கையில் முன்னுரிமை அடிப்படையில் கொரோனாத் தடுப்பூசி! – பட்டியல் இறுதியானது! இராணுவத் தளபதி

இலங்கையில் கொரோனாத் தடுப்பூசி வழங்கும் பணிகள் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக கொரோனாத் தடுப்பூசி வழங்கப்படவுள்ள முன்னுரிமைப் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது எனக் கொரோனாத் தடுப்புக்கான தேசிய...

ரசிகரின் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யாவுக்கு ரசிகர்கள் ஏராளம். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவ ‘அகரம்’ அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அதேபோல் அவரது ரசிகர்களும் மக்களுக்கு...

Stay Connected

6,384FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை கோட்டாபயவின் ஆணைக்குழு காப்பாற்றாது! –

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை ஆராயும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு தற்போது அமைத்துள்ள ஆணைக்குழு நாட்டுக்கு எந்த விதத்திலும் கைகொடுக்கப்போவதில்லை. இது வெறுமனே கண்துடைப்பு நாடகம்...

இலங்கையில் முன்னுரிமை அடிப்படையில் கொரோனாத் தடுப்பூசி! – பட்டியல் இறுதியானது! இராணுவத் தளபதி

இலங்கையில் கொரோனாத் தடுப்பூசி வழங்கும் பணிகள் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக கொரோனாத் தடுப்பூசி வழங்கப்படவுள்ள முன்னுரிமைப் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது எனக் கொரோனாத் தடுப்புக்கான தேசிய...

ரசிகரின் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யாவுக்கு ரசிகர்கள் ஏராளம். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவ ‘அகரம்’ அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அதேபோல் அவரது ரசிகர்களும் மக்களுக்கு...

மேல் மாகாண பாடசாலைகள் இன்று முதல்

இன்று முதல் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மேல் மாகாண மாணவர்களுக்காக மட்டும் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் கொரோனா வைரஸ் பரவல்...

கொரோனா தொற்றுக்குள்ளான 843 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 843 பேர் நேற்று (24) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 57,587 இலிருந்து...