இலங்கையில் மேலும் சில பகுதிகள் இன்று (06) காலை 5 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கண்டியில் அதிகளவான கொரோனாத் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டதை அடுத்து இன்று (06) அதிகாலை 05.00 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தி முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தின் பூஜாபிட்டி பொலிஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பமுனுகம தினவத்த பகுதியும் மற்றும் ஹேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகளை பகுதியும் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.