January 15, 2021, 5:24 pm

நல்லாட்சியில் TNA புலிகளின் மாவீரர்களுக்கு விளக்கு கொழுத்தியதை தவிர வேறு எதனை சாதித்தது?: அமைச்சர் வியாழேந்திரன்

கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் புலிகளது மாவீரர்களுக்கு விளக்குக் கொழுத்தி அரசியல் நடத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டதைத் தவிர தமிழ் மக்களுக்காக எதனையும் செய்யவில்லை என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த நல்லாட்சிக் காலத்தில் மட்டக்களப்பில் இரவு பகலாக குளிரிலும் மழையிலும் வேலையற்ற பட்டதாரிகள் 188 நாட்கள் போராடிய போதிலும் நல்லாட்சி அரசாங்கத்தினை தாங்கிப்பிடித்த தமிழ் தேசியக் கூட்டமைப்புச் சுயநலவாதத் தலைவர்களினால் அவர்களில் 20 வீதமானவர்களுக்குக்கூட வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. அவர்களது அரசியல் புலிகளது மாவீரர்களுக்கு மாவீரர் துயிலும் இல்லங்களில் விளக்கு வைப்பதற்கான வீணாய்ப் போன அரசியல் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
எமது ஜனாதிபதி கோட்டாபயவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டபோதிலும் 65 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற வீதி கையளிப்பு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே கோட்டாபய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் விஜாழேந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் எங்கள் ஜனாதிபதி கோட்டாபய பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். மட்டக்களப்புக்கும் தேர்தல் காலத்தில் வருகைதந்து பிரசாரத்தின்போது இந்த ஜனாதிபதிதான் தேர்தலில் வெற்றிபெறுவார் என்று கூறியிருந்தோம்.
பலர் இது எல்லாம் நடக்காது என கூறினர். சில தமிழ் அரசியல் தலைவர்கள், தீர்க்கதரிசிகள் இதுவெல்லாம் நடக்கின்ற கதையா என்றார்கள். கள யதார்த்தத்தினை நாங்கள் அன்று தெரிவித்திருந்தோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு இலட்சத்திற்கும் அதிகமான வாக்கு இருக்கின்றது. இதில் இரண்டு இலட்சத்து 39ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் அன்ன சின்னத்திற்கு அளிக்கப்பட்டது. தற்போதைய எமது ஜனாதிபதிக்கு 38ஆயிரம் வாக்குகள் மட்டுமே வழங்கப்பட்டன.
எங்கள் ஜனாதிபதி கோட்டாபய சில வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பினை வழங்குவது, அந்த வாக்குறுதிக்கு அமைவாக 34ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டு முடிந்துள்ளது. இரண்டாம் கட்டத்திற்கான நேர்முகத்தேர்வு நடந்துகொண்டிருக்கின்றது. விரைவாக ஒரு இலட்சம் நியமனங்களும் வழங்கி முடிக்கப்படும்.
முன்னைய அரசாங்கத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் பாதுகாத்தது. தமிழ் தலைவர்கள் அவர்களுக்கு ஆதரவாக வாக்களித்து அவர்களுடன் நடனமாடினார்கள். ஆனால் இந்த காந்திபூங்கா முன்பாக இரவு பகலாக மழையிலும் குளிரிலும் 188நாட்கள் பட்டதாரிகள் போராடியபோது அவர்களில் 20 சதவீதமானவர்களுக்கும் நியமனம் வழங்கப்படவில்லை. ஆனால் இந்த ஜனாதிபதி ஐம்பதாயிரம் பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்குவேன் என்று கூறியிருந்தார். இது சத்தியமா, பொய்பேசுகின்றார்கள் 50ஆயிரம் பேருக்கு ஒரே தரத்தில் நியமனம் வழங்கப்படுமா என்றார்கள்.
தற்போதுள்ள எமது பிரதமர் முன்னர் ஜனாதிபதியாக இருந்தபோது ஒரே நாளில் 57ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கினார். அதன் பின்னர் வந்த ஏமாற்று அரசாங்கத்தினை சம்பந்தர் ஐயா பாதுகாத்த போதிலும் இந்த மாவட்டத்தில் எத்தனை வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுத்தார்களா? கடந்த நல்லாட்சி அரசைப் பாதுகாத்த சம்பந்தர் உள்ளிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புலிகளின் மாவீரர்களுக்கு மாவீரர் நாளில் விளக்கு வைத்து அரசியல் செய்து மக்களை ஏமாற்ற நினைத்தார்களே தவிர வேறு எதனையும் சிந்திக்கவில்லை.
எமது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கூறியதற்கு அமைவாக ஐம்பதாயிரம் பட்டதாரிகளுக்கு அல்ல அறுபதாயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன. இன்னும் ஐந்தாயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

புலத்தின் ஊற்று நிறுவனத்தின் மூலம் கற்றல் உபகரணம் வழங்கல்

தாயகத்தில் உள்ள இனங்கானப்பட்ட மாணவர்களுக்கு சுவிஸ் நாட்டில் உள்ள தாயக உறவுகளின் பங்காளிப்புடன் புலத்தின் ஊற்று அமைப்பு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளது.பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்களின் வேண்டுகோளின்...

பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு!

பிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி கற்கும் யாழ்ப்பாணத்தை பார்வீகமாக கொண்ட , இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ்.தீவகம், அல்லைப்பிட்டி- மண்டைதீவுப் பகுதிகளைச் மாணவிகளே இவ்வாறு இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.பிரான்ஸில் மருத்துவத்துறையில்...

நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம்!

நல்லூர் பிரதேச சபையின் இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13  உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.நல்லூர் பிரதேச சபையின் 2ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் தவிசாளர் ப.மயூரனால் சபையில்...

Stay Connected

6,160FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

புலத்தின் ஊற்று நிறுவனத்தின் மூலம் கற்றல் உபகரணம் வழங்கல்

தாயகத்தில் உள்ள இனங்கானப்பட்ட மாணவர்களுக்கு சுவிஸ் நாட்டில் உள்ள தாயக உறவுகளின் பங்காளிப்புடன் புலத்தின் ஊற்று அமைப்பு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளது.பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்களின் வேண்டுகோளின்...

பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு!

பிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி கற்கும் யாழ்ப்பாணத்தை பார்வீகமாக கொண்ட , இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ்.தீவகம், அல்லைப்பிட்டி- மண்டைதீவுப் பகுதிகளைச் மாணவிகளே இவ்வாறு இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.பிரான்ஸில் மருத்துவத்துறையில்...

நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம்!

நல்லூர் பிரதேச சபையின் இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13  உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.நல்லூர் பிரதேச சபையின் 2ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் தவிசாளர் ப.மயூரனால் சபையில்...

6 பிள்ளைகளின் தாய் ரயிலில் விழுந்து மரணம்

ஹட்டன் நாவலப்பிட்டிக்கான சேவையில் ஈடுபடும் இரயிலின் முன்னால் பாய்ந்து ஆறு பிள்ளைகளின் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹட்டனில் இடம்பெற்றுள்ளது.ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் தோட்டத்தை சேர்ந்த ஆறு பிள்ளைகளின்...

இந்தோனீசியாவில் பாரிய நிலநடுக்கம்: சுலவேசி தீவில் ஏற்பட்ட 6.2 அதிர்வில் பலர் மரணம்

இந்தோனீசியாவின் சுலவேசி தீவில் 6.2 அளவில் ஏற்பட்ட கடும் நில நடுக்கத்தில் டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.நிலநடுக்கத்தால் பாதியளவு இடிந்த ஒரு மருத்துவமனையில் பல நோயாளிகளும், ஊழியர்களும் சிக்கிக்கொண்டிருக்கலாம் என்று செய்திகள்...