January 15, 2021, 5:02 pm

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்காது! போராட்டம் வெடிக்கும்..

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வெறும் 25 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கான சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு இடமளிக்கமுடியாது. அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவும், 25 நாட்கள் வேலையும் அவசியம். அவ்வாறு இல்லாவிட்டால் தொடர் போராட்டம் வெடிக்கும் என பெருந்தோட்ட தொழிலாளர் ஊதிய உரிமைக்கான இயக்கத்தின் செயற்பாட்டாளர் தங்கவேல் கணேசலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மஸ்கெலியாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவும், 25 நாட்கள் வேலையும் வழங்கப்படவேண்டும் என்பதே எமது பிரதான கோரிக்கையாகும். அதனை வென்றெடுப்பதற்காக ஆயிரம் ரூபா இயக்கம் உட்பட பல அமைப்புகளும் எம்முடன் கைகோர்த்துள்ளன. இதுவரை 20 இற்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்துள்ளன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா அவசியம் என்ற யோசனை 2014 இல் தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்டன. இதற்கு கம்பனிகள் உடன்படவில்லை. இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் வெறும் 20 ரூபாவே சம்பள உயர்வாக பெற்றுக்கொடுக்கப்பட்டது.

உற்பத்தி கொடுப்பனவு, வரவுக்கான கொடுப்பனவு, தேயிலை விலைக்கான கொடுப்பனவு போன்றன கம்பனிகளுக்கு சாதகமாக உள்ளன. எனவே, அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா அவசியம் என்றே அன்று அமரர் ஆறுமுகன் தொண்டமான் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் கம்பனிகள் முன்வைத்துள்ள புதிய யோசனையில் அவை உள்ளடக்கப்பட்டுள்ளன. தேயிலை விலைக்கேற்ற கொடுப்பனவாக 25 ரூபா வழங்கப்படவுள்ளது. இதன்படி தற்போது 750 ரூபா சம்பளம் பெறுபவர்கள் 775 ரூபாவை பெறும் நிலை உருவாகும். அப்படியானால் வெறும் 25 ரூபாவை மட்டுமே சம்பள உயர்வாக பெற்றுக்கொடுப்பதற்கான மோசடிகள் இடம்பெறுகின்றன. இதற்கு உடன்படமுடியாது.

தொழிலாளர்களின் கோரிக்கை உரிய வகையில் நிறைவேற்றப்படவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் தொடர் போராட்டம் வெடிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

புலத்தின் ஊற்று நிறுவனத்தின் மூலம் கற்றல் உபகரணம் வழங்கல்

தாயகத்தில் உள்ள இனங்கானப்பட்ட மாணவர்களுக்கு சுவிஸ் நாட்டில் உள்ள தாயக உறவுகளின் பங்காளிப்புடன் புலத்தின் ஊற்று அமைப்பு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளது.பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்களின் வேண்டுகோளின்...

பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு!

பிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி கற்கும் யாழ்ப்பாணத்தை பார்வீகமாக கொண்ட , இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ்.தீவகம், அல்லைப்பிட்டி- மண்டைதீவுப் பகுதிகளைச் மாணவிகளே இவ்வாறு இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.பிரான்ஸில் மருத்துவத்துறையில்...

நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம்!

நல்லூர் பிரதேச சபையின் இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13  உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.நல்லூர் பிரதேச சபையின் 2ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் தவிசாளர் ப.மயூரனால் சபையில்...

Stay Connected

6,160FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

புலத்தின் ஊற்று நிறுவனத்தின் மூலம் கற்றல் உபகரணம் வழங்கல்

தாயகத்தில் உள்ள இனங்கானப்பட்ட மாணவர்களுக்கு சுவிஸ் நாட்டில் உள்ள தாயக உறவுகளின் பங்காளிப்புடன் புலத்தின் ஊற்று அமைப்பு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளது.பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்களின் வேண்டுகோளின்...

பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு!

பிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி கற்கும் யாழ்ப்பாணத்தை பார்வீகமாக கொண்ட , இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ்.தீவகம், அல்லைப்பிட்டி- மண்டைதீவுப் பகுதிகளைச் மாணவிகளே இவ்வாறு இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.பிரான்ஸில் மருத்துவத்துறையில்...

நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம்!

நல்லூர் பிரதேச சபையின் இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13  உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.நல்லூர் பிரதேச சபையின் 2ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் தவிசாளர் ப.மயூரனால் சபையில்...

6 பிள்ளைகளின் தாய் ரயிலில் விழுந்து மரணம்

ஹட்டன் நாவலப்பிட்டிக்கான சேவையில் ஈடுபடும் இரயிலின் முன்னால் பாய்ந்து ஆறு பிள்ளைகளின் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹட்டனில் இடம்பெற்றுள்ளது.ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் தோட்டத்தை சேர்ந்த ஆறு பிள்ளைகளின்...

இந்தோனீசியாவில் பாரிய நிலநடுக்கம்: சுலவேசி தீவில் ஏற்பட்ட 6.2 அதிர்வில் பலர் மரணம்

இந்தோனீசியாவின் சுலவேசி தீவில் 6.2 அளவில் ஏற்பட்ட கடும் நில நடுக்கத்தில் டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.நிலநடுக்கத்தால் பாதியளவு இடிந்த ஒரு மருத்துவமனையில் பல நோயாளிகளும், ஊழியர்களும் சிக்கிக்கொண்டிருக்கலாம் என்று செய்திகள்...