கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி தனது நீண்ட நாள் தோழியான நோஹாவை அண்மையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது இருவரும் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
ஐ.பி.எல் 2020 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சார்பில் சிறப்பாக பந்துவீசி அனைவரது கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்தவர் வருண் சக்கரவர்த்தி. நடப்பு ஐ.பி.எல் தொடரில் ஒரு போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய ஒரே வீரர் வருண் சக்ரவர்த்தி தான்.
வருண் சக்ரவர்த்தியின் சிறப்பான பந்துவீச்சை தொடர்ந்து ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக அவருக்கு காயம் ஏற்பட்டதால் அந்த வாய்ப்பு தட்டி சென்றது.
இந்நிலையில் வருண் சக்ரவர்த்தி தனது நீண்ட நாள் தோழியான நேஹாவை திருமணம் செய்து கொண்டார். இருவீட்டார் மட்டுமே பங்கேற்று எளிய முறையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. வருண் சக்ரவர்த்தி – நேஹா திருமண புகைப்படம் இணையத்தில் வெளியானது. ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
வருண் சக்ரவர்த்தியின் திருமணம் எளிதாக நடைபெற்றாலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவரது நண்பர்கள், உறவினர்கள் என பலர் பங்குபெற்றனர். அப்போது இருவரும் வரவேற்பு மேடையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர்.
மணப்பென் நேஹா பேட்டிங் செய்ய அவருக்கு வருண்சக்ரவர்த்தி பந்துவீசினார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.