இலங்கையில் முஸ்லிம்கள் இறந்தவர்களைக் கூட அடக்கம் செய்ய முடியாத அதேவேளை, தமிழர்கள் இறந்தவா்களை நினைவுகூர முடியாதவாறு இலங்கையில் இன, மதவாதச் செயற்பாடுகள் இடம்பெறுவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மக்கள சமரவீத குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்ட நிலையில் தனது ருவிட்டரில் அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மற்றும் முஸ்லிம்களிடையே ஒரு புதிய தலைமுறை கடும்போக்குவாதிகளை உருவாக்க அரசாங்கம் உறுதியாக இருப்பதாக தெரிகிறது எனவும் அவா் தெரிவித்துள்ளார்.