January 17, 2021, 10:20 pm

தமிழ் மக்களின் நலன்களையும் இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும்: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

இலங்கை தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவது இலங்கை எதிர்கால நலனுக்கு சிறந்ததாக அமையும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

03 நாள் உத்தியோகபூா்வ பயணமாக நேற்று இலங்கை வந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை ஜனாதிபதி, மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.

அதனைத் தொடர்ந்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன உடன் இணைந்து கூட்டாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போதே இலங்கையில் உள்ள தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது இலங்கையின் நலனுக்கு சிறந்தது என இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

மேலும் இலங்கை தேர்தல் சமயத்தில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு , 13-வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல் என்பன குறித்து இலங்கை அரசு தரப்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும் இலங்கையின் நீண்டகால நலனுக்கு சிறந்த நடவடிக்கைகளாக அமையும் என்று ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

ஐக்கிய இலங்கைக்குள் இலங்கை தமிழ் மக்களின் சமத்துவம் நீதி அமைதி கண்ணியம் ஆகியவை தொடர்பான எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வது இலங்கையின் நீண்டகால நலனுக்கு சிறந்த நடவடிக்கையாக அமையும் என்றும் ஜெய்சங்கர் கூறினார்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் நலன் முன்னேற்றம் மற்றும் வளமான வாழ்க்கைக்கான வாய்ப்பு ஆகியவற்றை வழங்க உறுதிபூண்டு இருப்பதாக இச்சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று, வர்த்தகம் மற்றும் முதலீடு, கப்பல் போக்குவரத்து, இரு நாடுகளின் கடற்றொழிலாளர் விவகாரம் ஆகியவை தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சரும் தானும் விரிவாக பேசியதாக தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் கடுமையாக இருந்த சமயத்திலும் கூட இலங்கைக்கு இந்தியா மருந்துப் பொருட்களை அனுப்பியதை ஜெய்சங்கர் நினைவுகூர்ந்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு நெருக்கடி மத்தியிலும் இலங்கையுடன் ஒத்துழைப்பு கூட்டு நடவடிக்கைகளுக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளதாக ஜெய்சங்கர் தெரிவித்தார்.

பொது சுகாதாரம் மற்றும் பொருளாதார விடயங்களில் இந்தியா இலங்கையுடன் ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்க் கட்சியினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட தரப்பினரை நாளை வியாழக்கிழமை சந்தித்து பேச இந்திய வெளிவிவகார அமைச்சர் திட்டமிட்டுள்ளார்.

அத்துடன், இரு நாடுகளின் கடற்றொழிலாளர் விடயங்கள் குறித்து கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேச்சு நடத்த முடிவு செய்துள்ளனர்.

Related Articles

கிளிநொச்சி முரசுமோட்டயைில் விபத்து -இளைஞன் பலி!

கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில்  இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு 35 வீீீதி முரசுமோட்டை பகுதியில் இரவு 11 45 மணி அளவில் பரந்தன் பகுதியிலிருந்து சென்று கொண்டிருந்த...

உயிர் ஆபத்து ஏற்பட்டால் ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும்- சிறீதரன் எம்.பி!

உண்ணாவிரதம் இருக்கும் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும்- சிறீதரன் எம்.பி!கிளிநொச்சி பனைதென்னை வள அபிவிருத்திக் கூட்டுவுறவுச் சங்கத்தில்இறுதியாக...

உண்ணாவிரதம் இருக்கும் கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை கூட்டுறவாளர் உறுப்பினர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் வடக்கு மாகாண ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும்- சிவஞானம் சிறிதரன்

கிளிநொச்சி பனைதென்னை வள அபிவிருத்திக் கூட்டுவுறவுச் சங்கத்தில் இறுதியாக இருந்த நிர்வாகத்தை இடைநிறுத்தி ஐந்து பேர் கொண்ட நியமன நிர்வாகத்தை கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகம் நியமித்து தொழிலாளர்களை...

Stay Connected

6,230FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

கிளிநொச்சி முரசுமோட்டயைில் விபத்து -இளைஞன் பலி!

கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில்  இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு 35 வீீீதி முரசுமோட்டை பகுதியில் இரவு 11 45 மணி அளவில் பரந்தன் பகுதியிலிருந்து சென்று கொண்டிருந்த...

உயிர் ஆபத்து ஏற்பட்டால் ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும்- சிறீதரன் எம்.பி!

உண்ணாவிரதம் இருக்கும் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும்- சிறீதரன் எம்.பி!கிளிநொச்சி பனைதென்னை வள அபிவிருத்திக் கூட்டுவுறவுச் சங்கத்தில்இறுதியாக...

உண்ணாவிரதம் இருக்கும் கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை கூட்டுறவாளர் உறுப்பினர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் வடக்கு மாகாண ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும்- சிவஞானம் சிறிதரன்

கிளிநொச்சி பனைதென்னை வள அபிவிருத்திக் கூட்டுவுறவுச் சங்கத்தில் இறுதியாக இருந்த நிர்வாகத்தை இடைநிறுத்தி ஐந்து பேர் கொண்ட நியமன நிர்வாகத்தை கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகம் நியமித்து தொழிலாளர்களை...

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தெளிகரை பகுதியில் குடும்ப பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தெளிகரை பகுதியில் குடும்ப பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.தெளிகரையில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து குறித்த...

நோர்வேயில் தடுப்பு மருந்து போட்டு 23 பேர் உயிரிழப்பு

நோர்வேயில் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்ட முதியவர்கள் 23 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.இது தவிர தடுப்பூசியை போட்டுக் கொண்ட பலர் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி எடுத்துக் கொண்ட...