தமிழ்முஷ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்டு செயல்படவேண்டும் என்ற கொள்கையுடன் தமிழ்தேசிய தலைவர்கள் தந்தை செல்வாகாலம் தொடக்கம் ,விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், தற்போதைய சம்மந்தன் ஐயா காலம் வரை இருந்தனர் ஆனால் அதை தட்டிக்கழித்தவர்கள் முஷ்லிம் அரசியல்வாதிகளே என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுகட்சி ஊடக செயலாளரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
ஜக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் முன்னாள் ஶ்ரீலங்கா முஷ்லிம் காங்கிரஷ் செயலாளருமான ஹசன் அலி தமிழ் முஷ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்று பட்டு பயணிக்க தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ள செய்தி தொடர்பாக மேலும் கருத்து கூறிய பா.அரியநேத்திரன்.
1949,ல் இலங்கை தமிழரசு கட்சியை உருவாக்கிய்த தந்தை செல்வா வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கான சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை பெறுவதே ஒரே நோக்கம் என்ற கொள்கையில் உறுதியாய் செயல்பட்டார்.
வடக்கு கிழக்கு தாயகத்தில் தமிழ் முஷ்லிம் மக்களை ஒன்றுணைக்கும் சொல்தொடராக “தமிழ்பேசும் மக்கள்” என்ற சொல்லை முதன் முதலில் தந்தை செல்வா உச்சரித்தார் அது இன்று வரையும் வடக்கு கிழக்கில் தமிழ்பேசும் மக்கள் என அழைக்கப்படுவதும் தமிழ்முஷ்லிம் மக்களின் ஒற்றுமையையே கோடிட்டு காட்டியது.
இந்த அரசியல் பாரம்பரியத்தின் ஊடாகவே இலங்கை தமிழரசு கட்சியில் பல முஷ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்றுணைந்து செயல்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் அரசியல் தலைவர்களாவும் தங்களுடைய முகவரிகளை தக்கவைத்தனர்.
1976, வட்டுக்கோட்டை தீர்மானத்தை தமிழர் விடுதலை கூட்டணி தந்தை்செல்வா உள்ளுட்ட்தமிழ் தலைவர்கள் முன்னிலையில் நிறைவேற்றிய காலத்திலும் முஷ்லிம் அரசியல் தலைவர்கள் மறைந்த அஷரப் மற்றும் மல தலைவர்கள் அதில் இணைந்து செயல்பட்ட னர்.
அதன்பின்னரான காலப்பகுதியில தமிழ் இளைஞர்களின் ஆயுதப்பொராட்டம் ஆரம்பமான காலத்திலும் முஷ்லிம் இளைஞர்கள் தமிழ் இளைஞர்களுடன் இணைந்து பல போராட்ட இயக்கங்களில் பங்குபற்றினர்.
விடுதலைப்புலிகளின் மாவீரர் பட்டியலிலும் ஏறக்க்குறைய 40.முஷ்லிம் இளைஞர்கள் இணைக்கப்பட்டனர், இலங்கை தமிழரசு கட்சியால் தந்தை செல்வா தலைமையில் நடத்தப்பட்ட அனேகமான அகிம்ஜை ரீதியிலான போராட்டங்களிலும் முஷ்லிம் பெண்களும் பங்குபற்றினர் இதுவெல்லாம் உண்மை வரலாறுகள்.
ஆனால் தமிழ்தேசிய இனத்தின் விடுதலைப்போராட்டத்தை பிரித்தாளும் தந்திரத்தை கொண்டு அடக்க நினைத்த இலங்கை பேரினவாத அரசுகளின் திட்டத்திற்கு துணைபோன சில முஷ்லிம் அரசியல் தலைவர்களின் சுயநல அரசியல் போக்கால் வடக்கு கிழக்கு தமிழ்பேசும் மக்களுடையே இருந்த பருந்துணர்வும் உறவும் விரிசல் அடைந்தது.
அதன்வெளிம்பாடு 1990, காலத்தில் முஷ்லிம் இளைஞர்களை அரச படைகளில் இணைந்து தமிழ்தேசிய விடுதலைபோராட்டத்திற்கு எதிராக ஊர்காவல் படை மற்றும் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கியதன் வெளிப்பாடுகள் காரணமாக தமிழ்முஷ்லிம் மக்களுடையே வெறுப்புணர்வு தோற்றம் மேலோங்கியது அதனால் பல கசப்பான சம்பவங்கள் ஏற்பட்டன.
ஆனால் 2004,ல் தமிழ்தேசிய கூட்டமைப்பு 22.பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நானும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தேன் அப்போது ஶ்ரீ லங்கா முஷ்லிம் ஹாங்கிரஷ் தலைவர் றவூஹக்கீம் அப்போது செயலாளராக இருந்த ஹசன் அலி உட்பட முஷ்லிம் பாராளுமன்ற குழுக்களுடன் பல தடவை தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்மந்தன் ஐயா தலைமையில் நாங்கள் வடக்கு கிழக்கு தமிழ்பேசும் மக்கள் ஒற்றுமையாக இணைந்து செயல்பட்டால் மட்டுமே தமிழ்முஷ்லிம் மக்களின் அரசியல் உரிமையை வென்றெடுக்கமுடியும் என வலியுறுத்தி பல சந்திப்புக்களை நடத்தினோம்.
இதேபோல் வன்னியில் தமிழீழவுடுதலைப்புலிகள் தலைவர் வே.பிரபாகரன் அவர்களையும் முஷ்லிம் அரசியல் தலைவர்களையும் சந்தித்து தமிழ் முஷ்லிம் அரசியல் செயல்பாடுகள் பற்றியும் எதிர்காலத்தில் எடுக்கவேண்டிய்நிலைப்பாடுகள் பற்றி எல்லாம் இணக்கப்பாடுகள் ஏற்பட்டன அதுகூட இலங்கை அரசினால் முஷ்லிம் தலைவர்களை சரிவர செயல்படுத்தாமல் தடைபோடப்பட்டது.
அதன்பின்னரான உக்கிரமான போர் இலங கைப் படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் திருகோணமலை மாவிலையாற்றில் தொடங்கி முள்ளிவாய்காலில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு ஈழவிடுதலை ஆயுதப்போராட்டம் மௌனித்த பின்பு இலங்கையில் பல இடங்களிலும் சிங்கள மக்கள் பால் சோறும் கட்டச் சம்பலும் கொடுத்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தபோது வடக்கு கிழக்கில் உள்ள காத்தான்குடி, ஒட்டமாவடி, ஏறாவூர், கல்முனை, மருதமுனை, நிந்தவூர், பொத்துவில், மூதூர், மன்னார், என எல்லா இடங்களிலும் முஷ்லிம் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் பல முஷ்லிம்மக களும் வர்தகர்களும் இராணுவ வெற்றியை கொண்டாடினர் அப்போது வடக்கு கிழக்கு மக்கள் தமது உறவுகளை பலிகொடுத்து ஏங்கித்தவித்த காலம் இணைந்து வாழ்ந்த தமிழ் முஷ்லிம் உறவுகளில் இந்த் செயல் இன்னும் தமிழ்மக்களின் மனதில் கசப்புணர்வுகளை தொற்றுவித்தன.
விடுதலைப்புலிகளின் மௌனத்திற்கு பின்னரான காலப்பகுதியில 2010, தொடக்கம் இன்று வரை தமிழ்தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கு இணைந்த ஒரு சுயநிரணய அரசியல் தீர்வை பெறும் நோக்கில் தமிழ் முஷ்லிம் அரசியல் செயல்பாடுகள் இருக்கவேண்டும் எனவும் அப்படியான ஒரு அரசியல் யாப்பு திருத்தமே உகந்தது என்ற கொள்கையை அடிப்படையாக பல தடவை நாம் வலியுறுத்தியுள்ளொம்.
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை கூட தரம் உயர்த்துவதற்கு முஷ்லிம் அரசியல் தலைவர்களின் சுயலாப அரசியல்தானே காரணம் என்பதை தமிழ்மக்கள் நன்கு அறிவர்.
வடக்கு கிழக்கு இணைந்த அரசியல் பலமே முஷ்லிம் தமிழ் மக்களின் இருப்பை பாதுகாக்கும் என்ற உண்மையை குறிகிய அரசில் லாபம் கொண்ட முஷ்லிம் அரசியல் தலைவர்கள் இனியாவது உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே முஷ்லிம் மக்களின் இருப்பும் தமிழ் மக்களின் இருப்பும் வடக்கு கிழக்குல் பாதுகாப்புடன் உறுதிப்படுத்தப்படும் இதனை உணர்ந்து அந்த அடிப்படையில் தமிழ் தலைவர்களைடன் பேசுவதற்கு முஷ்லிம் தலைவர்கள் முன்வரவேண்டும்.
அதைவிட்டு அன்றாட பிரசரசனைகளைக்காக மட்டும் தமிழ்முஷ்லிம் தலைவர்கள் ஒன்றுபடுவது்நிரந்தர் தீர்வாக அமையாது தமிழ்தேசிய கூட்டமைப்பு இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ்பேசும் மக்களின் சுயநிரணய உரிமையுடன் வாழவேண்டும் என்பதே எனவும் மேலும் கூறினார்.