January 20, 2021, 12:39 pm

தமிழ்ச்சோலை பெயர் மாற்ற விடயம்! நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய கூட்டமைப்பு எம் பி சிறீதரன்

கிளிநொச்சி தமிழ்ச் சோலை வித்தியாலயம், கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயம் என்ற பெயரில் இயங்கி வருவது தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

எனினும் இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர், பாடசாலையின் பெயர் மாற்றத்தில் தன்னால் எதனையும் செய்ய முடியாது என வலியுறுத்தியுள்ளார்.

இன்றை தினம் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கிளிநொச்சி தமிழ்ச் சோலை வித்தியாலயம், கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயம் என்ற பெயரில் இயங்கி வருவது தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தன்னிச்சையாக செயற்பட்டு, தன்னுடைய புகைப்படத்தை பாடசாலையில் தொங்கவிட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ், பெயர் மாற்றம் சட்ட ரீதியாக இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதன்போது கருத்து வெளியிட்ட சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தன்னுடைய புகைப்படத்தை பாடசாலையில் தொங்கவிட்டுள்ளதோடு, தன்னை பாடசாலையின் நிறுவுனர் எனக் கூறிக்கொள்வது சரியான எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனினும், இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர், பாடசாலையின் பெயர் மாற்றம் சரியான நடைமுறையின் கீழ் இடம்பெற்றுள்ளதாக மீண்டும் குறிப்பிட்டார்.

எனினும் மீண்டும் கருத்து வெளியிட்ட சிறீதரன், இந்தப் பாடசாலை 2007ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாக நீங்களே குறிப்பிடுகின்றீர்கள். எனினும் 2010ஆம் ஆண்டு அதனை தான் உருவாக்கியதுபோல் காட்டிக்கொள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முயற்சிப்பதாக மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு கல்வி அமைச்சர் பதிலளிக்கையில், “இந்த பெயர் மாற்றமானது, அதிகாரிகள் மட்டத்தில் படிப்படியான அனுமதியுடன் இடம்பெற்றுள்ளது. அமைச்சின் தலையீடு எதுவும் இல்லை. அதனைவிட அமைச்சிற்கு மிகப்பெரிய அதிகாரங்கள் எதுவும் இல்லை. இந்த தீர்மானமானது பெற்றோர் தரப்பில் இருந்து வந்தது. இதற்கமைய அதிகாரிகள் செயற்பட்டுள்ளனர்” எனக் கூறியுள்ளார்.

எனினும் சிறீதரன் மீண்டும் அதே கேள்வியை எழுப்பியுள்ளார்.

”என்னால் தனித்து தீர்மானம் மேற்கொள்ள முடியாது. பெற்றோரின் வேண்டுகோளுக்கு அமைய அதிகாரிகள் செயற்பட்டுள்ளனர். அமைச்சர் என்ற வகையில் எதுவும் செய்ய முடியாது.” என கல்வி அமைச்சர் பதிலளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

நெடுந்தீவு கடலில் கடற்படை படகுடன் மோதி மூழ்கிய இந்திய மீனவர்களை தேடும் பணி தீவிரம்!

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து, யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி, இந்திய மீனவப் படகிலிருந்தவர்களை தேடி விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.நேற்று...

கனடாவில் புதிய கோவிட்19 கட்டுப்பாடுகள் எந்நேரமும் நடைமுறைக்கு வரலாம் என எச்சரிக்கை!

பல்வேறு நாடுகளில் கொரோனா புதிய திரிவு வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில் கனேடிய மத்திய அரசின் புதிய பயணக் கட்டுப்பாடுகள் முன்னறிவித்தல் இன்றி எந்நேரமும் அமுலாகலாம் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.எனவே,...

குருந்தூர் மலை விவகாரம்! தமிழ் மக்களுக்கு விதுர விக்ரமநாயக்க விடுத்துள்ள செய்தி!

தமிழ் மக்களின் மத மற்றும் கலாச்சார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது என்று தேசிய மரபுரிமைகள், கலைகலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.குருந்தூர் மலை தொல்பொருள்...

Stay Connected

6,361FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

சாம்சுங் நிறுவத்தின் தலைவருக்கு இரண்டரை வருட சிறை!

உலகின் மிகப்பெரிய திறன்பேசி தயாரிப்பு நிறுவனமான சாம்சுங் நிறுவனத்தின் தலைவருக்கு மிகப்பொிய கையூட்டு மோசடிக் குற்றச்சாட்டில் குற்றவாளி என உறுதியானதைத் தொடர்ந்து அவருக்கு இரண்டரை வருடம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டள்ளது.லீ ஜெய்-யோங் சாம்சுங் நிறுவனத்தின் கீழ்...

தமக்குரிய கடமைகளை செவ்வனே செய்து முடித்ததாக ட்ரம்ப் தெரிவிப்பு!!!

 தாம் எதைச் செய்வதற்காக தெரிவுசெய்யப்பட்டாரோ அதனை செவ்வனே செய்து முடித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.அத்துடன் மேலும் பல விடயங்களை செய்துள்ளதாகவும் தமது பிரியாவிடை உரையில் அவர் கூறியுள்ளார்.YouTube காணொளியொன்றில், ஜனாதிபதி...