January 24, 2021, 11:30 am

தமிழர்களின் எண்ணங்களையும் உள்வாங்கி புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்கிறார் சிறீதரன் எம்.பி

Attachments

தமிழர்களின் எண்ணங்களையும் உள்வாங்கி புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.புதிய அரசியலமைப்பும் தமிழர்களின் முன்மொழிவும் எனும் தலைப்பில் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் இணைய வழி மூலமான கலந்துரையாடல் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் தலைமையுரை ஆற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.இதுவரை உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புக்கள் யாவும் தமிழர்களின் கருத்துக்களையும் உணர்வுகளையும் பிரதிபலிக்காது சிங்கள அரசியல் தலைவர்களின் எண்ணங்களுக்கும்  சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தும் வகையிலுமே அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.சிங்களத் தலைவர்களால் முன்மொழியப்பட்ட தமிழர்களின் உரிமை சார்ந்த விடயங்கள் கூட உள்வாங்கப்படவில்லை. அரசியல் அமைப்பிலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டதால்த்தான் எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடினார்கள். தமிழ் தலைவர்களினதும் தமிழ் புத்திஜீவிகளினதும் தமிழ் மக்களினதும் கருத்துக்களை கேட்டு அறிய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.சிறப்பு பேச்சாளராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசியல்த்துறைத் தலைவர் பேராசிரியர் கணேசலிங்கம்அழைக்கப்பட்டிருந்தார்.இந்த கூட்டத்தில் இல தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பதில் பொது செயலாளர் சத்தியலிங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் , சாணக்கியன், கலையரசன் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் பிரதேச அமைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

Related Articles

ஜனாதிபதி ஆணைக்குழு கண்துடைப்பு நடவடிக்கையே! – மனோ விமர்சனம்!

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் எதிர்வரும் மார்ச் மாதம் கொண்டு வரவுள்ள பிரேரணையைச் சமாளிக்கும் வகையில், கண்துடைப்புக்காகவே புதிய ஆணைக்குழுவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளார்."- இவ்வாறு தமிழ் முற்போக்குக்...

சர்தேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை, பயணத் தடை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பரிந்துரை????

இலங்கையை சர்சதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) நிறுத்தி விசாரணைகளை முன்னெடுப்பதற்கான பரிந்துரைகளை தனது சமீபத்திய அறிக்கையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.மேலும் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆராயவும் அது...

கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்தில் போதைப்பொருள் நிரப்பப்பட்ட டென்னிஸ் பந்துகள் இரண்டு கண்டுபிடிப்பு!

வெலிகந்த - கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்தில் நேற்று இரவு வெளிப்புறத்திலிருந்து எறியப்பட்ட போதைப்பொருள் நிரப்பிய டென்னிஸ் பந்துகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.தனி நபரொருவரால் அல்லது குழுவொன்றினால் குறித்த சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று...

Stay Connected

6,383FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

கல்வியமைச்சிடம் இருந்து மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்..!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக மாத்திரம் நாளை முதல் மேல்மாகாணத்திலுள்ள பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.கல்வியமைச்சு இதனை தெரிவித்துள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் கொவிட்-19 பரவலுடன் மேல்மாகாணத்திலுள்ள அனைத்து...

கொழும்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் கொரோனா அதிகரிப்பு…!

நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 724 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 197 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம்...