January 20, 2021, 12:30 pm

தமிழரின் தொன்மையான கார்த்திகைத் தீபம் வழிபாடு

தமிழரின் தொன்மை வழிபாட்டில் தீபவழிபாடு முக்கியமானது. கார்த்திகைத் தீபம் பற்றிய பல பாடல்கள் சங்ககாலத்தில் உள்ளது. “தொல் கார்த்திகைத் திருநாள்…………தனத் தேந்தின முலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்” என்று திருஞானசம்பந்தர் பாடுகிறார். பிரமாவும் வி~;ணுவும் சிவசோதியில் அடி முடி தேடிக் காண முடியாத வேளையில் சிவபொருமான் சோதிப்பிழம்பாய் வெளிப்பட்டு அருள் பாலித்தார். பின் அச் சோதிபிளம்பு மலை வடிவமாயிற்று. இது நடைபெற்றது கார்த்திகை கார்த்திகையில் ஆகும். அக்கணம் பிரமாவும் வி~;ணுவும் சிவபிரானை நோக்கிப் பெருமானே! தேவரீர் அழற்பிழம்பாக நின்றதன் அடையாளமாக மலையின் உச்சியில் ஒரு சோதி எக்காலத்தும் தோன்ற வேண்டும் என்று வேண்டினர். அப்போது இறைவன் “கார்த்திகைக்குக் கார்த்திகை நாள் ஒரு சோதியை மலைமீது காட்டா நிற்போம்.” என்றார். அந்நாள் முதல் இந் நற்தீபப் பெருவிழா நடைபெற்று வருகின்றது. இம்மலையே திருவண்ணாமலை ஆகும். சிவபெருமான் அக்கினி வடிவாக மலைபோல பேரொளியாய், சிவந்த நிறத்தில் எழுந்து நின்றதால் இம்மலை அருணாசலம், சோணாசலம் என அழைக்கப்படுகின்றது.

தமிழர்களின் கார்த்திகைத் தீபவழிபாட்டின் தொன்மையினை அருணாசலபுராணம் எடுத்துக் கூறுகின்றது. இற்றைக்கு 500 வருடங்களுக்குமுன் வாழ்ந்த சைவ எல்லப்ப நாவலர் அருணாசலபுராணத்தை அருளினார்.

கார்த்திகைத் தீப தரிசன மகிமையை அருணாசலபுராணத்தில திருமலைச்சருக்கத்தில் 159ம் பாடலில் குறிப்பிடப்படுகின்றது.

கார்த்திகைக்கு கார்த்திகைநாள் ஒரு சோதி
மலைநுனியில் காட்டா நிற்போம்
வாய்த்து வந்த சுடர் காணில் பசி பிணிஇல்
லாது; உலகில் மன்னி வாழ்வர்;
பார்த்திவர்க்கும் அருந்தவர்க்கும் இடையூறு
தவிரும்; இது பணிந்தோர், கண்டோர்
கோத்திரத்தில் இருபத்துஓர் தலைமுறைக்கு
முத்திவரம் கொடுப்போம் என்றார்.

கார்த்திகைத் தீபதரிசனம் இருபத்து ஒரு தலைமுறைக்கு முத்தியைத் தருவதாக சிவபெருமான் அருட்காட்சி அளித்தார்.

கந்தபுராணக் கலாச்சாரம் விளங்கும் யாழ்ப்பாணத்தில் நல்லைக் கந்தனின் கார்த்திகைத் தரிசனம்.

வில்லில் சொல்லில் எல்லில்
அல்லிலும் எல்லிலும் இல்லில் ஆல்
எல்லையில் ஏல்லில் ஆல்
நல்லையில் அல்லலில் இல்லல்.

ஆறுமுகசுவாமிகளின் உற்பவம் சரவணப் பொய்கையிலேயே கார்த்திகை நட்சத்திரத்திலேயே நிகழ்ந்தது. இந்நிகழ்வு பிரபஞ்ச இயக்கத்தினையும், உயிரின் இயக்கத்தினையும் காட்சியளவையில் விளக்குவதாக அமைகின்றது. சரவணப் பொய்கையில் தோன்றிய பேரொளி இறையொளியாகும். அஃதே கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட ஆறுமுகக்கடவுளால் மெய்யுணர்த்தப்பட்டது.

போரொளி ஆகிய பெரிய அவ் வெட்டையும்
பாரொளி ஆனப் பதைப்பு அறக் கண்டவன்
தாரொளி ஆகத் தரணி முழுதுமாம்
ஓர் ஒளி ஆகிய காலொளி காணுமே. (திருமந்திரம் 693)

இறைஒளியைச் சித்தவெளியில் நாம் காணல் வேண்டும். இதற்கு தீப ஆராதனை உதவுகின்றது.

சித்த ஒளியும் சீவமுத்தி ஒளி என்பதனை திருமந்திரம் விளக்குகின்றது.

அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்
பிண்ட ஒளியால் பதற்றும் பெருமையை
உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளிந்தது
கொண்ட குறியை குலைத்தது தானே. (திருமந்திரம் 2806)

உடலாக, உயிராக, அது உணரும் உணர்வாக உள் ஒளிரும் தீச்சுடராக, எட்டாத் தொலைவாய் விண்ணும் மண்ணும் அளக்க நின்ற பேருருவமாய், உலகைத் தாங்கும் ஆதாரமாக, சூரியனாக, சந்திரனாக இவற்றை ஆளுகின்ற பரம்பொருள் அண்டம் முழுதும் கலந்து நிற்பதை தீபத்தால் வணங்குதல் தமிழர் தொல்வழமையாகும்.
அருணாசலத்தில் அருணகிரிசுவாமிகளின் திருப்புகழ் சைவசித்தாந்தக் கருத்தினை திருமுறையாகக் கூறுகின்றது.

ஏறு மயில் ஏறி விளையாடு முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகம் ஆனபொருள் நீயருளல் வேண்டும்.
ஆதி யருணாசலம் அமர்ந்த பெருமாளே.

தமிழரின் தொன்மையான இறைவழிபாடாக தீப வழிபாடு அமைந்து உள்ளது. இறைவனை ஒளிச்சுடராகவே போற்றினர். சிவகதி என்பதும் சிவதுரியம் என்பதும் முத்தி என்பதும் ஆன்மஒளி இறையுடன் சேர்தல் எனப் பொருள்படும். இதனாலேயே இவ்வுலகைவிட்டு நீங்கியவர்களையெல்லாம் தமிழர்கள் தீப ஆராதனையால் வழிபடுகின்றனர். இவற்றில் முக்கியமானதே கார்த்திகைக் கார்த்திகை தீப வழிபாடாகும். இன்றைய இயற்பியல் விஞ்ஞானமும் சைவசித்தாந்தக் கருத்துகளுக்குள்ளேயே அடங்கி உள்ளது. இன்றைய இயற்பியல் அணுவின் உள்ளேயும் ஒளி அலைகளே உள்ளன எனக் கண்டறிந்துள்ளது. அகிலத்தின் அப்பாலும் நாத அதிர்வுகளே உள்ளன எனக் கண்டறிந்துள்ளது. இதுவே ஓம் எனும் பிரணவப் பொருளாகும். இதனையே சைவர்கள் சிவமாகத் தீபமாக வணங்குகின்றனர். எனவே தமிழர்களின் ஆன்ம தரிசன வழிபாட்டை குறுக்கீடு செய்தல் நல்லது அல்ல. குறிப்பாகக் கந்தபுராணக் கலாச்சாரம் மேல் ஓங்கிய யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் காலத்தில் நடந்த மதநிந்தை போன்றநிலையே இன்றைய யாழ்ப்பாணத்தின் கார்த்திகை விளக்கீட்டின்போது சில இடங்களில் நிகழ்ந்துள்ளது.

யாமிருக்கப் பயம் ஏன்
வாழ்விருக்க வியம் மேன்
யாழிருக்க லயம் நல்வேல்
தாழிருக்க நயம் தேன்.

“மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்”

Related Articles

நெடுந்தீவு கடலில் கடற்படை படகுடன் மோதி மூழ்கிய இந்திய மீனவர்களை தேடும் பணி தீவிரம்!

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து, யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி, இந்திய மீனவப் படகிலிருந்தவர்களை தேடி விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.நேற்று...

கனடாவில் புதிய கோவிட்19 கட்டுப்பாடுகள் எந்நேரமும் நடைமுறைக்கு வரலாம் என எச்சரிக்கை!

பல்வேறு நாடுகளில் கொரோனா புதிய திரிவு வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில் கனேடிய மத்திய அரசின் புதிய பயணக் கட்டுப்பாடுகள் முன்னறிவித்தல் இன்றி எந்நேரமும் அமுலாகலாம் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.எனவே,...

குருந்தூர் மலை விவகாரம்! தமிழ் மக்களுக்கு விதுர விக்ரமநாயக்க விடுத்துள்ள செய்தி!

தமிழ் மக்களின் மத மற்றும் கலாச்சார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது என்று தேசிய மரபுரிமைகள், கலைகலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.குருந்தூர் மலை தொல்பொருள்...

Stay Connected

6,361FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

நெடுந்தீவு கடலில் கடற்படை படகுடன் மோதி மூழ்கிய இந்திய மீனவர்களை தேடும் பணி தீவிரம்!

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து, யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி, இந்திய மீனவப் படகிலிருந்தவர்களை தேடி விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.நேற்று...

கனடாவில் புதிய கோவிட்19 கட்டுப்பாடுகள் எந்நேரமும் நடைமுறைக்கு வரலாம் என எச்சரிக்கை!

பல்வேறு நாடுகளில் கொரோனா புதிய திரிவு வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில் கனேடிய மத்திய அரசின் புதிய பயணக் கட்டுப்பாடுகள் முன்னறிவித்தல் இன்றி எந்நேரமும் அமுலாகலாம் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.எனவே,...

குருந்தூர் மலை விவகாரம்! தமிழ் மக்களுக்கு விதுர விக்ரமநாயக்க விடுத்துள்ள செய்தி!

தமிழ் மக்களின் மத மற்றும் கலாச்சார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது என்று தேசிய மரபுரிமைகள், கலைகலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.குருந்தூர் மலை தொல்பொருள்...

சாம்சுங் நிறுவத்தின் தலைவருக்கு இரண்டரை வருட சிறை!

உலகின் மிகப்பெரிய திறன்பேசி தயாரிப்பு நிறுவனமான சாம்சுங் நிறுவனத்தின் தலைவருக்கு மிகப்பொிய கையூட்டு மோசடிக் குற்றச்சாட்டில் குற்றவாளி என உறுதியானதைத் தொடர்ந்து அவருக்கு இரண்டரை வருடம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டள்ளது.லீ ஜெய்-யோங் சாம்சுங் நிறுவனத்தின் கீழ்...

தமக்குரிய கடமைகளை செவ்வனே செய்து முடித்ததாக ட்ரம்ப் தெரிவிப்பு!!!

 தாம் எதைச் செய்வதற்காக தெரிவுசெய்யப்பட்டாரோ அதனை செவ்வனே செய்து முடித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.அத்துடன் மேலும் பல விடயங்களை செய்துள்ளதாகவும் தமது பிரியாவிடை உரையில் அவர் கூறியுள்ளார்.YouTube காணொளியொன்றில், ஜனாதிபதி...