அக்கரப்பத்தனை பிரதேசபைத் தலைவர் கதிர்ச்செல்வன் கலந்து கொண்ட அரச நிகழ்வில் பங்கேற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸநாயக்க தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த 17ம் திகதி கண்டி பொல்கொல்ல பகுதியில் நடந்த நடந்த நிகழ்விலேயே திஸநாயக்க பங்கேற்றிருந்தார்.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பலரும் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.