January 24, 2021, 12:00 pm

ஜெனீவா கூட்டத்தொடருக்கான தமிழர் தரப்பின் நடவடிக்கைகளை ஐ.நா. பிரதிநிதியிடம் கூறினார் சி.வி.விக்னேஸ்வரன்

ஜெனிவா கூட்டத்தொடரில் தமிழர் தரப்பு விடுக்கவுள்ள கோரிக்கைகள் குறித்து, இலங்கையின் ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கருக்கு நாடாளுமன்ற உறுப்பினர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் விளக்கமளித்துள்ளார்.

ஹனா சிங்கரின் அழைப்பின் பேரில் சி.வி.விக்னேஸ்வரன், அவரது அலுவலகத்திற்கு இன்று (திங்கட்கிழமை) சென்று கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இந்தச் சந்திப்பில், ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச்சில் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் மற்றும் வருங்காலத்தில் பொருளாதார ரீதியாக வடக்கு கிழக்கு மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையால் செய்யக்கூடிய நன்மைகள் எவை என்பது பற்றியும் ஹனா சிங்கர் கேட்டறிந்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள விக்னேஸ்வரன், தெற்கிலிருந்து வடக்கு, கிழக்கு நோக்கிப் பயணித்தால் போரின் பின்னர் வட கிழக்கிற்கு ஏதேனும் நன்மைகள் பெற்றுக் கொள்ளப்பட்டதா என்பதை அறிந்து கொள்ளலாம் எனக் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த ஹனா சிங்கர், தான் ஒருமுறை வடக்கு நோக்கி வந்ததாகக் குறிப்பிட்ட ஹனா சிங்கர், அந்தப் பகுதிகள் கிராமப்புறங்கள் போலவே காட்சியளித்ததாகக் குறிப்பிட்டார்.

இதேவேளை, போரின் பின்னர் 11 வருடங்களாகியும் வடக்கு மாகாணத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்ற அவர், இவ்வாறு முன்னேற்றம் ஏற்படுவதை மத்திய அரசாங்கம் விரும்பவில்லை என்பதே யதார்த்தமானது என சி.வி. சுட்டிக்காட்டினார்.

மேலும், போரின் போதும் அதன் பின்னரும் தமிழ் மக்களுக்கு நேர்ந்தவற்றைப் பற்றி முற்றாக அறிந்துகொண்டாலே ஐக்கிய நாடுகள் சபை வடக்கு கிழக்கிற்கு என்ன வேண்டும் என்பதைத் தீர்மானிக்கலாம் சி.வி.குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களுக்கு முதலாவதா நியாயமான அரசியல்தீர்வு வேண்டும். இரண்டாவது அங்குள்ள மாணவ மாணவியரின் கல்வி நிலை உயர வேண்டும். மூன்றாவது தொழில்களை உருவாக்க பல செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

அத்துடன் வடக்கையும் கிழக்கையும் கிழக்குக் கரையோரமாக இணைக்கும் கடுகதி பெருந்தெருவொன்று அமைக்கப்பட வேண்டும் என சி.வி.விக்னேஸ்வரன் ஹனா சிங்கரிடம் தெரிவித்தார்.

இதனிடையே, மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறுமா என ஹனா சிங்கர் கேட்டுக்கொண்டதற்கு, இந்தியாவின் அனுசரணை இல்லாமல் 13ஆவது திருத்தச் சட்டத்தைக் கைவாங்க முடியாது. எனினும் தமிழர்களுக்குக் கூடிய வலுவுள்ள ஓர் அரசியல் அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்தால் இதனை எதிர்பார்க்கலாம் என சி.வி.குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

ஜனாதிபதி ஆணைக்குழு கண்துடைப்பு நடவடிக்கையே! – மனோ விமர்சனம்!

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் எதிர்வரும் மார்ச் மாதம் கொண்டு வரவுள்ள பிரேரணையைச் சமாளிக்கும் வகையில், கண்துடைப்புக்காகவே புதிய ஆணைக்குழுவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளார்."- இவ்வாறு தமிழ் முற்போக்குக்...

சர்தேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை, பயணத் தடை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பரிந்துரை????

இலங்கையை சர்சதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) நிறுத்தி விசாரணைகளை முன்னெடுப்பதற்கான பரிந்துரைகளை தனது சமீபத்திய அறிக்கையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.மேலும் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆராயவும் அது...

கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்தில் போதைப்பொருள் நிரப்பப்பட்ட டென்னிஸ் பந்துகள் இரண்டு கண்டுபிடிப்பு!

வெலிகந்த - கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்தில் நேற்று இரவு வெளிப்புறத்திலிருந்து எறியப்பட்ட போதைப்பொருள் நிரப்பிய டென்னிஸ் பந்துகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.தனி நபரொருவரால் அல்லது குழுவொன்றினால் குறித்த சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று...

Stay Connected

6,383FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

கல்வியமைச்சிடம் இருந்து மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்..!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக மாத்திரம் நாளை முதல் மேல்மாகாணத்திலுள்ள பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.கல்வியமைச்சு இதனை தெரிவித்துள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் கொவிட்-19 பரவலுடன் மேல்மாகாணத்திலுள்ள அனைத்து...

கொழும்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் கொரோனா அதிகரிப்பு…!

நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 724 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 197 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம்...