ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பத்தில் இடம்பெறவுள்ளது. அதில் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படும் என ஷமல் செனரத் தெரிவிக்கிறார்
மாகாண சபை தேர்தலுக்கான ஆயத்தம் குறித்தும் இதில் கலந்துரையாடப்படவுள்ளது.
எதிர்வரும் மாகாணசபை தேர்தலின் போது கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பில் ஏற்கனவே அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஷமல் செனரத் தெரிவித்துள்ளார். அது குறித்த உத்தியோகபூர்ப கலந்துரையாடல் எதிர்காலத்தில் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.