இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து பயணத்தை ஆரம்பித்த பயணிகள் விமானமொன்று காணாமற்போயுள்ளது.50-க்கும் அதிகமான பயணிகளுடன் பயணத்தை ஆரம்பித்து சில நிமிடங்களில், விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ விஜய எயார் விமான சேவைக்கு சொந்தமான போயிங் 737 விமானமே காணாமற்போயுள்ளது.தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து Pontianak நகருக்கு செல்லும் வழியிலேயே விமானம் காணாமற்போயுள்ளது.விமானத்தைத் தேடும் பணிகள் மற்றும் மீட்புப் பணிகளுக்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.