கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பலரும் அதிலிருந்து குணமடைந்த பின்னரும் மணம், சுவை உணர்வுகள் அற்றிருக்கின்றனர் என்று விஞ்ஞானிகள் அவதானித்துள்ளனர். இந்த உணர்வுகள் மீளத் திரும்புமா? அப்படியானால் எப்போது திரும்பும் என்று மருத்துவர்களால் கூறமுடியாது உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சுவை, மண உணர்வுகள் முற்றாக இழக்கப்படுவது குறித்து நியூயோர்க் ரைம்ஸ் ஓர் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதிலேயே இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டது.
மேலும், சுவை, மணம் உணர்வுகள் இழப்பால் பாதிக்கப்பட்டவர்கள் உள ரீதியாகவும் பாதிக்கப்படலாம் என்றும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிக்கும்போது முதல் அறிகுறியாக மணம் குறைந்து வரும். சிலருக்கு மண உணர்வுடன் சுவை உணர்வும் பாதிக்கப்படுகின்றது.
ஆனால், தொற்றிலிருந்து மீண்டவர்களில் சிலர் மணம், ருசி உணர்வை முற்றாகவே இழந்துள்ளமை தெரிய வந்துள்ளது. இது நிரந்தரமாகவே இருந்துவிடவும் கூடும் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.