வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை மீறி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டால், சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வரும் செயற்றிட்டம் தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு தேவையான அனைத்து வழிகாட்டல்களும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் சுற்றுலா பயணிகளை அழைத்து வரும் விடயத்தில் ஏதேனும் சிக்கல் நிலைமை ஏற்பட்டால் அது தொடர்பான வழிகாட்டல்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வரும் செயற்றிட்டம் சுற்றுலா துறை அபைச்சின் முழுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.