January 25, 2021, 1:32 pm

சுமந்திரனின் குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறேன்; கட்சி தலைமைக்கு எதிராக செயற்படுவதற்கு நடவடிக்கை: மாவை

எம்.ஏ.சுமந்திரன் கடிதத்தில் குறிப்பிட்ட விடயங்களை நான் நிராகரிக்கிறேன். அவர் கட்சி தலைமைக்கு எதிராக செயற்படுவது குறித்து விரைவில் செயற்குழுவில் ஆராய்வோம். சுமந்திரனிற்கான பதில் 2ஆம் திகதி வழங்கப்படும் என அதிரடி அறிவித்தல் விடுத்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா.

இன்று யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில், கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை உறுப்பினர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுமந்திரன் கடிதம் எழுதியது பெரிய விடயமல்ல. இப்படித்தான், கடந்த பொதுத்தேர்தல் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி எனக்கு எதிரான கருத்துக்களை சொன்னார். இப்பொழுதும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

கட்சியின் செயற்குழுவை கூட்டி இதைப்பற்றி பேச வேண்டும். கடிதத்திற்கு பதிலளிக்க வேண்டுமா இல்லையென்பதை நான்தாக் தீர்மானிக்க வேண்டும். ஆனால் பதிலளிக்க வேண்டும்.

நாளை கிறிஸ்தவ மக்களி்ன் புத்தாண்டு தினம். மக்கள் கொரொனா நெருக்கடிக்குள் இருக்கிறார்கள். இந்த நிலையில் நாளை பத்திரிகைகளில், கட்சி விடயமாக நான் பேசி, அவை செய்திகளாக வெளியாவதை நான் விரும்பவில்லை. குற்றச்சாட்டு, பதில் என நாளை செய்திகள் வருவதை நான் விரும்பாத படியால், 2ஆம் திகதியளவில் இதற்கான பதில் வழங்குவேன்.

ஆனால், நான் தன்னிச்சையாக முடிவெடுத்ததாக சுமந்திரன் கூறியிருப்பதை நான் நிராகரிக்கிறேன். எங்கள் கட்சித் தலைவர்கள், மாநகரசபை உறுப்பினர்களுடன் ஆலோசித்து, இருக்கின்ற நெருக்கடிகளை ஆராய்ந்து தீர்மானம் எடுத்தோம். அந்தந்த சபைகளின் உறுப்பினர்களுடன் ஆராய்ந்து, 3 கட்சிகளின் தலைவர்கள் இந்த முடிவுகளை எடுத்தோம்.

ஆர்னோல்ட்டை ஆதரிப்பதாக மிகப்பெருமளவான உறுப்பினர்கள் கூறினர். அதனால் ஆர்னோல்ட்டை தீர்மானித்தோம். அவரை ஆதரிப்பதாக அனைத்து உறுப்பினர்களும் கூறினார்கள். ஆனால், எங்கள் உறுப்பினர் ஒருவர் வாக்களிக்காமல் விட்டதால், சமமான முடிவு ஏற்படவில்லை. அவர் வாக்களித்திருந்தால் ஒரு வேளை பூவா தலையா போடுவதில் எமக்கு ஆசனம் கிடைத்திருக்கும்.

இதுபற்றி எல்லா உறுப்பினர்களும் முறைப்பாடு செய்தார்கள். கூட்டமைப்பை தோற்கடிக்க அப்படி நடந்திருந்தால் நீங்கள் முறைப்பாடு செய்யுங்கள். அதற்குரிய ஒழுங்கு முறைப்படி ஒழுங்கு நடவடிக்கையெடுக்கப்படும் என்றேன். வாக்களிப்பில் கலந்து கொள்ளாத அருள்குமரன் மீது ஒழுங்கு நடவடிக்கையெடுப்பதற்காக, அவரிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பும்படி செயலாளரை நான் கேட்டுக் கொள்வேன் என்றார்.

Related Articles

ரசிகரின் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யாவுக்கு ரசிகர்கள் ஏராளம். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவ ‘அகரம்’ அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அதேபோல் அவரது ரசிகர்களும் மக்களுக்கு...

மேல் மாகாண பாடசாலைகள் இன்று முதல்

இன்று முதல் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மேல் மாகாண மாணவர்களுக்காக மட்டும் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் கொரோனா வைரஸ் பரவல்...

கொரோனா தொற்றுக்குள்ளான 843 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 843 பேர் நேற்று (24) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 57,587 இலிருந்து...

Stay Connected

6,384FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

ரசிகரின் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யாவுக்கு ரசிகர்கள் ஏராளம். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவ ‘அகரம்’ அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அதேபோல் அவரது ரசிகர்களும் மக்களுக்கு...

மேல் மாகாண பாடசாலைகள் இன்று முதல்

இன்று முதல் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மேல் மாகாண மாணவர்களுக்காக மட்டும் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் கொரோனா வைரஸ் பரவல்...

கொரோனா தொற்றுக்குள்ளான 843 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 843 பேர் நேற்று (24) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 57,587 இலிருந்து...

கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை வியாழன் முதல்…

இந்திய அரசாங்கம் இலவசமாக வழங்கும் கொவிட் தடுப்பு மருந்தின் முதலாவது தொகுதி புதன்கிழமை நாட்டிற்கு கொண்டுவரப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.எதிர்வரும் வியாழக்கிழமை சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களுக்கு தடுப்பூசி வழங்கும்...

இலங்கையில் மேலும் 03 மரணங்கள் பதிவு!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 03 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (24) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 280 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...