சுன்னாகம் சந்தையில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடும் 38 வயதான ஒருவருக்கே தொற்று
உறுதியானது. முச்சக்கர வண்டி சாரதிகளிற்கு எழுமாற்றாக சோதனை நடந்தது. இவரும்
முச்சக்கர வண்டி வைத்திருப்பவர் என்ற அடிப்படையில் சோதனைக்குட்பட்டதில் தொற்று உறுதியானது.
இவருக்கு சில நாட்களின் முன்னரே காய்ச்சல், தடிமன் ஏற்பட்டுள்ளது. எனினும், அதற்கு சில
தினங்களின் முன்னர் மழையில் நனைந்தபடி மரவள்ளி பிடுங்கியிருந்தார். அதனால் ஏற்பட்ட
காய்ச்சல் என தான் நினைத்ததாக தெரிவித்திருக்கிறார்.