January 27, 2021, 5:55 am

சிறிலங்கா பொருட்களைப் புறக்கணிக்கக்கோரி பிரித்தானியாவில் போராட்டம்!

டிசம்பர் 9ம் திகதி  ஐக்கிய நாடுகள் சபையால் இனஅழிப்பால் பாதிக்கப்பட்டோர் நினைவாகவும் இனஅழிப்புகளைத் தடுப்பதற்காகவுமான நாளாகஅனுட்டிக்கப்படுகிறது. அதனையொட்டி பெருமளவிலான பிரித்தானியத் தமிழர்கள் சிறிலங்காவிலிருந்து அந்த அரசிற்கு அன்னியச் செலாவணி ஈட்ட  இறக்குமதி செய்யும் பொருட்களை புறக்கணிக்கக்கோரி பிரபல வர்த்தக நிலையங்களின் வெளியே கவனயீர்ப்பு போராட்டங்களை நடாத்தினார்கள். 

Marks & Spencer, NEXT, Tesco, ASDA, Sainsbury’s, Waitrose, Victoria’s Secret, H&M போன்ற நிறுவனங்கள் பாரிய அளவில் சிறிலங்காவில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளை விற்பனை செய்கின்றன. அவற்றின் பல கிளைகளின்  வெளியே சிறிலங்காவின் இனஅழிப்பு பற்றிய தகவல்கள் தாங்கிய சுலோக அட்டைகளுடன் நின்ற பிரித்தானியத் தமிழர்கள் அங்கு வந்த வாடிக்கையாளர்களிடம் அது பற்றி விளக்கி, முடிந்தவரையில் அப்பொருட்களை வாங்குவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டனர். அது மட்டுமல்லாமல் சிறிலங்கா உற்பத்திகளுக்குப் பதில் வேறு எவற்றை வாங்கலாம் என்ற அறிவுரைகளையும் வழங்கினர்.

Wimbledon Marks & Spencer கிளைக்கு வெளியே கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மீரா என்றவர் “நத்தார் பண்டிகக்காலத்தில்  பொருட்களை வாங்க வந்த பலர் எம்முடன் கதைத்தனர். எமது மக்களுக்கு ஏற்பட்ட அவலம் பற்றி அநேகர் அறிந்திருந்தாலும் அந்த அவலம் தொடர்வதற்கு தாம் வாங்கும் பொருட்களும் உதவுகின்றன என்பது பலருக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. தயவு செய்து வேறு நாட்டு உற்பத்திகளை வாங்கி உதவுமாறு அவர்களிடம் கேட்டுக்கொண்டோம்”, என்று கூறினார். 

Manchesterல் உள்ள NEXT ஆடை நிறுவனத்தின் வெளியே போராடிய வசந்தன் என்பவரும் இந்நாட்டு மக்கள் அனைவரும் தமது அமைதியான கவனயீர்ப்புப் போராட்டத்தை வரவேற்றதாகவும் சிறிலங்கா உற்பத்திகளை புறக்கணிப்பது பற்றி சிந்திப்பதாகக் கூறியதாகவும் சொன்னார்.

Related Articles

சரியான தருணம் மலர்ந்துள்ளது! திடீர் சந்திப்பைத் தொடர்ந்து சுமந்திரன்!

அரசியல் ரீதியாக இலங்கையில் பல்வேறு அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டு வரும் தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் இணைந்து புதிய அரசியல் பாதையொன்றை வகுக்க வேண்டிய சரியான தருணம் மலர்ந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்தேசிய...

அரசை வீட்டுக்கு துரத்தி அடிக்கும் காலம் நெருங்கிவிட்டது!!-மங்கள தெரிவிப்பு!

இலங்கையில் 69 இலட்சம் மக்களின் ஆதரவுடன் ஆட்சிபீடம் ஏறினோம் என தம்பட்டம் அடித்த கோத்தாபாய அரசு,அந்த மக்களால் வீட்டுக்குத் துரத்தியடிக்கும் காலம் நெருங்கி வருகிறது என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.இது...

கொரோனா தொற்றுக்குள்ளான 755 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 755 பேர் நேற்று (26) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,167 இலிருந்து...

Stay Connected

6,387FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

சரியான தருணம் மலர்ந்துள்ளது! திடீர் சந்திப்பைத் தொடர்ந்து சுமந்திரன்!

அரசியல் ரீதியாக இலங்கையில் பல்வேறு அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டு வரும் தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் இணைந்து புதிய அரசியல் பாதையொன்றை வகுக்க வேண்டிய சரியான தருணம் மலர்ந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்தேசிய...

அரசை வீட்டுக்கு துரத்தி அடிக்கும் காலம் நெருங்கிவிட்டது!!-மங்கள தெரிவிப்பு!

இலங்கையில் 69 இலட்சம் மக்களின் ஆதரவுடன் ஆட்சிபீடம் ஏறினோம் என தம்பட்டம் அடித்த கோத்தாபாய அரசு,அந்த மக்களால் வீட்டுக்குத் துரத்தியடிக்கும் காலம் நெருங்கி வருகிறது என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.இது...

கொரோனா தொற்றுக்குள்ளான 755 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 755 பேர் நேற்று (26) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,167 இலிருந்து...

இலங்கையில் மேலும் 01 மரணம் பதிவு!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 01 மரணம் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (26) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 287 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...

பறிபோனது யாழ்.கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயம்;சமூக ஆர்வலர்கள் கவலை

யாழ்.நல்லுார் கந்தர்மடம் சைவப்பிரகாச பாடசாலை ஒரு லட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் ஜனாதிபதி செயலணியின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் சமுக ஆர்வலர்கள் இது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளனர்.மாகாண கல்வியமைச்சின் ஆழுகைக்குட்பட்ட குறித்த பாடசாலை...