அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்விக்கும் வகையில் தான் நடித்த சுல்தான் திரைப்படம் உள்ளதாக, நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின், வெற்றியை கொண்டாடும் விதமாக செய்தியாளர் சந்திப்பு கூட்டம், சென்னை வடபழனி நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் கார்த்தி, மக்களை முழுமையாக ரசிக்க செய்வது தான் மாஸ் படங்களின் வெற்றி எனவும், அந்த வகையில் சுல்தான் படத்தின் காட்சிகளை, மக்கள் மிகவும் ரசித்து பார்த்து வருவதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.