பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களை கொள்ளையடித்தவர் முகின். இவர் தற்போது கதாநாயகனாக படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் புதிய படத்திற்கு வேலன் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இப்படத்தை கவின் என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மீனாக்ஷி நடிக்கிறார். மீனாக்ஷி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரபு, சூரி, மரியா, தம்பி ராமையா, ஹரீஷ் பேரடி, ஸ்ரீரஞ்சனி, சுஜாதா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்.
