January 15, 2021, 11:25 pm

சிங்களவர்களை வாழவைத்து தமிழர்களை அழிக்கும் அமைப்பாக மகாவலி அதிகாரசபை: கஜேந்திரன்

உலக வங்கி, மகாவலி அதிகாரசபைக்கு நிதி உதவி வழங்கி மயிலத்தமடு மாதவனை பகுதியில் இனவாத அடிப்படையிலே தமிழர்களை அழித்து, தமிழர்களுடைய பொருளாதாரத்தினை அழித்து சிங்கள பேரினவாத குடி பரம்பலை ஏற்படுத்துவதற்கு துணைபோகின்றார்களா என்ற கேள்வியை கேட்க விரும்புகின்றதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மகாவலி அதிகாரசபை என்பது சிங்களவர்களை மட்டும் வாழ வைக்கின்ற, தமிழர்களை அழிக்கின்ற அமைப்பா என்ற கேள்வியை நான் கேட்ட விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் நாட்டுப் பற்றாளர் நடேசன் அறக்கட்டளை அமைப்பின் ஊடாக வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சுங்கான்கேணி, கிண்ணையடி ஆகிய கிராமத்தில் இருந்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், மயிலத்தமடு மாதவனை பகுதியில் எட்டாயிரம் ஏக்கர் காணி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கள விவசாயிகள் என்று சொல்பவர்களால் பலவந்தமாக காணிகள் பிடிக்கப்படுகின்றன.

திடீரென வந்து ஒரு பகுதியினை பிடித்து தங்களுடைய பகுதி என்று பிரகடனம் செய்கின்றார்கள். பின்னர் பண்ணையார்களிடம் மூன்று நாட்களுக்குள் இந்த பகுதியை விட்டு செல்ல வேண்டும், இல்லையெனில் உங்களை வெட்டுவோம், மாடுகளை கொலை செய்வோம் என்று சொல்கின்றார்கள்.

வெளியேறாதவிடத்து மாடுகளை கொலை செய்கின்றார்கள். மக்களை அடித்து அச்சுறுத்துகின்றனர். அச்சத்தின் காரணமாக பண்ணையாளர்கள் வெளியேறுகின்றார்கள். இதன் பிற்பாடு அக்காணியை துப்பரவு செய்கின்றார்கள். இதற்கு மகாவலி அதிகாரசபை முழுமையாக துணை நிற்கின்றது. எட்டாயிரம் ஏக்கர் காணியில் சோளம், நெல் செய்கை செய்யப்படுகின்றது.

மகாவலி அதிகார சபைக்கு உலக வங்கி நிதி உதவி வழங்கி வருகின்றது. உலக வங்கி மகாவலி அதிகாரசபைக்கு நிதி உதவி வழங்கி இங்கு இனவாத அடிப்படையிலே தமிழர்களை அழித்து தமிழர்களுடைய பொருளாதாரத்தினை அழித்து சிங்கள பேரினவாத குடிப்பரம்பலை ஏற்படுத்துவதற்கு தான் துணைபோகின்றார்களா என்ற கேள்வியை கேட்க விரும்புகின்றேன். இதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

மனைவியை படுக்கைக்கு அழைத்ததாக கூறி நுண்கடன் வங்கி மீது கிளிநொச்சியில் இன்று தாக்குதல்

மனைவியை படுக்கைக்கு அழைத்ததாக கூறி கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் நுண்கடன் வங்கி மீது இன்று தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது குறித்த நிறுவனத்தில் கடன் பெற்ற கோணாவில் பகுதியைச்...

புலத்தின் ஊற்று நிறுவனத்தின் மூலம் கற்றல் உபகரணம் வழங்கல்

தாயகத்தில் உள்ள இனங்கானப்பட்ட மாணவர்களுக்கு சுவிஸ் நாட்டில் உள்ள தாயக உறவுகளின் பங்காளிப்புடன் புலத்தின் ஊற்று அமைப்பு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளது.பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்களின் வேண்டுகோளின்...

பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு!

பிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி கற்கும் யாழ்ப்பாணத்தை பார்வீகமாக கொண்ட , இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ்.தீவகம், அல்லைப்பிட்டி- மண்டைதீவுப் பகுதிகளைச் மாணவிகளே இவ்வாறு இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.பிரான்ஸில் மருத்துவத்துறையில்...

Stay Connected

6,163FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம்!

நல்லூர் பிரதேச சபையின் இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13  உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.நல்லூர் பிரதேச சபையின் 2ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் தவிசாளர் ப.மயூரனால் சபையில்...

6 பிள்ளைகளின் தாய் ரயிலில் விழுந்து மரணம்

ஹட்டன் நாவலப்பிட்டிக்கான சேவையில் ஈடுபடும் இரயிலின் முன்னால் பாய்ந்து ஆறு பிள்ளைகளின் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹட்டனில் இடம்பெற்றுள்ளது.ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் தோட்டத்தை சேர்ந்த ஆறு பிள்ளைகளின்...