கிளிநொச்சி பூநகரி மண்டைக்கல்லாற்றை அண்டிய கடற்பரப்பில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளைப் பயன்படுத்திய ஐந்து மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் இன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட நபர்களுடன் அவர்களின் படகுகள் மூன்று, படகு இயந்திரங்கள், பயன்படுத்திய தங்கூசி வலைகள் என்பவற்றை மீட்ட நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் நாளைய தினம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளனர். குறித்த ஐந்து மீனவர்களும் பள்ளிக்குடாவைச் சேர்ந்தவர்கள் என அறிய முடிந்துள்ளது.

