கொழும்பு புறக்கோட்டை மெனிங் சந்தை வர்த்தகர்கள் சிலர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் ஆர்ப்பாட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் இவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
பெலியகொடை புதிய சந்தை கட்டிடத் தொகுதியில் தமக்கு வர்த்தக நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட இடவசதி போதுமானதாக இல்லை எனத் தெரிவித்தே அவர்கள் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுக்குக் கூறியபோதும் தமக்கு உரிய பதில் வழங்கப்படவில்லை என்றும் இந்த வர்த்தகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்ட கொரோனா நிலைமை காரணமாக பெலியகொடை சந்தை சில மாதங்கள் பூட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.