இலங்கையில் நேற்றைய தினம் (08) கொரோனா தொற்று காரணமாக 35வது மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் வைத்திய அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
78 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வீட்டில் ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குறித்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே உயிரிழந்துவிட்டதகவும் நேற்று இரவு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட மாரடைப்பே அவரது மரணத்திற்கு காரணம் எனவும் அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.