இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 362 பேர் இன்று (06) இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,228 இலிருந்து 27,590 ஆக அதிகரித்துள்ளது.
பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புபட்ட 285 பேருக்கும், சிறைச்சாலை கொத்தணியில் 77 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 27,590 பேரில் தற்போது 6,993 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக 20,460 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன் 137 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர்.