January 18, 2021, 6:09 pm

கொரோனாவை பயன்படுத்தி சிவில் நிர்வாகத்தை கையகப்படுத்தியது இராணுவம் – ஜஸ்மின் சூக்கா

போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு முகங்கொடுத்துள்ள இராணுவ அதிகாரிகளைப் பாதுகாக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலைப் பயன்படுத்துகின்றது என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயல்திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பானர் ஜஸ்மின் சூக்கா குற்றம்சாட்டியுள்ளார்.

அதேவேளை இந்த இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி சிவில் நிர்வாகத்தை இராணுவம் அபகரித்துள்ளது என்றும் அவர் கடுமையாகக் சாடியுள்ளார்.

போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நாவால் பெயரிடப்பட்ட மற்றும் மனித உரிமை மீறல்களுக்காக அமெரிக்க அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒரு ஜெனரல் கொரோனாவை தடுப்பதற்கான நாட்டினுடைய தேசிய நடவடிக்கைகள் மையத்திற்கு பொறுப்பாக உள்ளார் என்பது மட்டுமல்ல கடந்த வாரம் வரை 2009 இல் இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் ஈடுபட்ட அனுபவத்தைக் கொண்ட 25 இராணுவ அதிகாரிகள் நாடு முழுவதும் பொதுமக்களின் சுகாதாரத்துக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னர் வேண்டுமென்றே குண்டுத்தாக்குதல்கள் மற்றும் எறிகணைத்தாக்குதல்களை வைத்தியசாலைகள் மீதும் மேற்கொண்டு, மக்களைப் பட்டினிபோட்ட, உயிர்காக்கும் மருந்துகளை மறுத்த இதே இலங்கை இராணுவ அதிகாரிகள் தற்போது மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவர்களது நியமனமானது கொரோனா அவரசரகால நிலையைப் பயன்படுத்தி கறைபடிந்த அமைப்பை சுத்தம் செய்யும் ஒரு இழிவான முயற்சியாகும். அத்துடன் இதற்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது தொடர்பில் சர்வதேச சமூகத்துக்கும் இது ஒரு பாரதூரமான பிரச்னையை ஏற்படுத்துகின்றது.

இராஜதந்திரிகளும் நன்கொடை வழங்கும் நாடுகளும் சிவில் நிர்வாகம் அகற்றப்பட்டு வலுவற்றதாகச் செய்யப்படும் இந்தச் செயல்பாட்டுக்குத் துணைபோகக்கூடாது. கொரோனா நிலைமையைக் கையாள்வதற்கு மாவட்ட இராணுவ இணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 25 இராணுவ அதிகாரிகளில் குறைந்தது 16 பேர் 2008 – 2009 இறுதிப்போரில் ஈடுபட்டவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.நா. அமைதிகாப்பு படை நடிவடிக்கைகளில் இருந்தும் தடுக்கும் அதேவேளையில் நகைமுரணாக இந்த அதிகாரிகள் தாம் போரில் தோற்கடித்தவர்களை தாம் அடக்கியாளும் பிரதேசங்கள் உட்பட பொதுமக்களின் சுகாதாரத்தை மேற்பார்வை செய்பவர்களாக இருக்கின்றார்கள்.

2009 இல் வேண்டுமென்றே பொதுமக்கள் இலக்குகளை இலக்கு வைத்தல், கூட்டாகப் படுகொலை செய்தல், வலிந்து காணாமல்போதல்கள், பாலியல் வன்புணர்வு மற்றும் சித்திரவதைகளில் தொடர்புபட்டிருந்தமையையும் அத்துடன் தேவையான உணவுப்பொருட்கள், மருந்துப் பொருட்கள், உயிர் தப்புவதற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விநியோகங்கள் போர் வலயத்திலுள்ள தமிழ் பொதுமக்களை சென்றடைவதினை வேண்டுமென்றே மறுத்தல் மற்றும் தடுத்தல் போன்றவற்றிலும் இராணுவம் கருவியாக இருந்துள்ளது என்பதை காட்டும் நியாயமான ஆதாரங்கள் உள்ளன.

போரில் பொதுமக்களின் உயிர்கள் மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சர்வதேச சட்டங்களை மீறியிருக்கும் இந்த இராணுவத்தினரில் சிலர் தற்போது நாட்டினுடைய சுகாதாரத்திற்குப் பொறுப்பாக உள்ளனர் என்பது முடிவான அவமதிப்பாகும்.

சிவில் நிர்வாகத்திற்குப் பொறுப்பாக இராணுவ கட்டளையதிகாரிகளை நாடு முழுவதும் போடுதல் தற்போது இருக்கும் அரசாங்க அதிகாரிகளின் அதிகாரத்தினை இரத்துச் செய்வதாக உள்ளது. சுகாதாரம் தொடர்பான அவசரநிலை ஒரு போதும் ஜனநாயகத்தை அழிப்பதை நியாயப்படுத்தாது ஊழலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் பல முக்கிய அதிகாரிகள் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தினுள் கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்காக வடிவமைக்கப்பட்ட சர்வதேச உதவியில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பிலான பாரதூரமான கேள்விகள் உள்ளன.

மிகவும் இராணுமயப்படுத்தப்பட்ட அரசாங்கமானது தனது அதிகாரத்தினை நிலைநிறுத்துவதற்கும், இறந்தவர்களைப் புதைப்பதற்கான தமது உரிமை சட்ட ரீதியற்ற முறையில் மறுக்கப்பட்ட முஸ்லீம்கள் போன்ற சிறுபான்மையினரின் உரிமைகளை மீறுவதற்கும் ஏற்ற ஒரு மறைப்பாக கொரோனா வைரஸ் மாறியிருக்கின்றது’ என சூக்கா தெரிவித்தார்.

‘சுகாதாரப் பராமரிப்பு பற்றிய நிபுணத்துவம் அரிதாக இருந்தும் அதனை வழங்குதல் என்ற போர்வையின் கீழ் இலங்கை இராணுவம் சிவில் நிர்வாகப் பொறுப்பினை மெதுவாக அபகரித்துக் கொண்டுள்ளது இது நீண்ட காலப் பாதிப்பினை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.

Related Articles

திடீரென மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தினால் நுவரெலியாவில் தொடர்ந்தும் பதற்றம்!- விசேட அதிரடிபடையினர் குவிப்பு

நுவரெலியா- கந்தப்பளை, பார்க் தோட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு முதல் தொடர்ச்சியாக அமைதியின்மை நிலவி வருகின்றது.பார்க் தோட்ட முகாமையாளர் பெருந்தோட்டத் தொழிலாளர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனையும் தகாத வார்த்தைகளினால் பேசிய சம்பவத்தை...

பாதுகாப்புக்கு மத்தியில் அமெரிக்காவில் ஆங்காங்கே ஒன்றுகூடும் எதிர்ப்பாளர்களால் கடும் பரபரப்பு!

அமெரிக்க ஜனாதிபதியாக நாளை மறுத்தினம் புதன்கிழமை ஜோ பைடன் பதவியேற்கவுள்ள நிலையில் மாகாண அரசு தலைமையகங்கள் முன்பாக ஆயுதம் ஏந்திய சிலர் உட்பட சிறிய அளவிலான எதிர்ப்பாளர்கள் கூடி வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.வொஷிங்டனில்...

கனடாவில் சடுதியாக அதிகரிக்கும் உயிரிழப்பு; மொத்த கொரோனா பலி 18,000 –ஆக உயர்வு!

கனடாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட 149 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த நிலையில் நாட்டில் பதிவானமொத்த கொரோனா மரணங்கள் 18 ஆயிரத்தைக் கடந்துள்ளன.ஞாயிற்றுக்கிழமை கனடா முழுவதும் 6,433 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்...

Stay Connected

6,241FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

காணி சுவீகரிப்பதற்காக பொலிஸாரை வரவழைத்துள்ளமையால் மண்டைதீவில் பதற்ற நிலை

விருந்தினர் விடுதி ஒன்று அமைப்பதற்காக மக்களின் காணி சுவீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களத்தினர் பொலிஸாரை வரவழைத்துள்ளமையால் மண்டைதீவில் பதற்ற நிலை ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.முன்னதாக ஒன்று திரண்ட மக்கள்...

யாழில் பொதுச் சந்தைகள் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறக்கப்படுகின்றன !

டந்த மாதம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா அதிகரித்ததன் காரணமாக யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது சந்தைகளும் சுகாதார பிரிவினரால் மூடப்பட்டிருந்த நிலையில் வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் வழிகாட்டுதலுக்கிணங்க இன்றைய தினம்...