இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணியினால் 100000 பனம் விதைகள் நாட்டும் செயற்திட்டம் இன்று செருக்கன் பகுதியில் ஆரம்பம்
கிளிநொச்சி மாவட்த்தில் 100, 000 பணம் விதைகள் நடும் திட்டத்தின் கீழ் முதலாம் கட்டமாக இன்று மாவட்டத்தின் பரந்தன் செருக்கன் பகுதியில் பூநகரி வீதியின் இரு மருங்கிலும் பனம் விதைகள் நடுகை ஆரம்பமானது.
இயற்கையின் சமநிலையை பேணவும், நிலத்தடி நீரினை பாதுகாக்கவும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்கவும் மரங்களை உருவாக்குவது இன்றைய காலத்துக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது. இந்த வகையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் பங்குபற்றலுடன் , பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் ஆலோசனையுடன் சுமார் ஒரு இலட்சம் பணம் விதைகள் நடும் திட்டத்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது
இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் செயலாளர் சு.சுரேன் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேலமலிகிதன் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப தவிசாளர் மு.கஜன் ரமேஷ் பூநகரி அமைப்பாளர் குகேந்திரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட வாலிபர் முன்னணியினர் கலந்து கொண்டனர்