கிளிநொச்சி பளை இத்தாவில் பகுதியில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – பளை வைத்தியசாலையில் அமைதியின்மை
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிகளை ஏற்றி பயணித்த அரச பேருந்து பாதசாரிகள் கடவையில் துவிச்சக்கர வண்டியில் கடந்த நபருடன் மோதி துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் படுகாயங்களுடன் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார் .
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட குறித்த நபரினை வைத்தியசாலை நிர்வாகத்தினர் மற்றும் வைதியர் வைத்தியசாலைக்குள் அனுமதிக்காது எந்தவிதமான முதல் உதவிகளும் வழங்காது வெளியில் வைத்து கை நரம்பு நாடியை பிடித்து குறித்த நபர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இவ்வேளை படுகாயங்களுடன் கொண்டு செல்லப்பட்ட நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வரை உயிருடன்தான் இருந்தார் அவருக்கு எந்தவிதமான முதல் உதவிகளும் வழங்காமையாலே குறித்த நபர் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் வைத்தியசாலை நிர்வாகத்துடன் வாய்தர்க்கத்தில் ஈடுபட்டனர் அதனால். பளை வைத்தியசாலையில் அமைதியின்மை ஏற்பட்டது.
அமைதியின்மை தொடர்பாக அறிந்த பளை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அமைதியின்மையை கட்டுப்படுத்தினர்.
விபத்துக்குள்ளான நபர் பளை அரசர் கேணியை சேர்ந்த 68 வயது உடைய பொன்னையா சிவராசா என தெரிவித்ததுடன் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என பளை போலீசார் தெரிவித்தனர்