தருமபுர பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட மாயவனுர் பகுதியில் பல நாற்களாக ஆடுகளைதிருடிவந்த நிலையில் தருமபுர பொலிசார் வீதிச்சோதணையின் போது வட்டக்கச்சி மாயவனுர் பகுதியிலிருந்து இரண்டு ஆடுகளை அதிகாலை வேளை திருடியவர்கள் புளியம்பொக்கனைப் பகுதிக்கு கொண்டு சென்று இறச்சிக்காக வெட்டுவதற்கு தயார்நிலையில் இருந்தபொழுது சம்பவயிடத்திற்கு விரைந்த தருமபுர பொலிசார் சம்பவயிடத்தில் இருந்த இரண்டு ஆடுகளையும் அவர்கள் பயன்படுத்திய முன்று 3 மோட்டார் சைக்கிள்களும் 4 சந்தேக நபரக்ளும் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் அன்றையதினம் இரவு அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர் மேலும் 4 நான்கு ஆடுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியில் சுமார் 50ஆடுகள் இதுவரை திருடப்பட்டுள்ளதாகவும் திருடர்களிடமிருத்து ஆட்டினை கொள்வனவு செய்தவர் வாக்குமூலம் அழித்துள்ளார் . இதேவேளை இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் 3 பேர் தப்பிச்சென்றுள்ளனர்.
இவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .அத்துடன் ஆட்டைத் தொலைத்தவரகள் என பலபேர் தருமபுர பொலிசாரிடம் முறைப்பாடுகள் பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசார் விரிவான விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர். எனவும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மயூரன் P.C தெரிவித்தார் .