January 21, 2021, 2:51 am

கிளிநொச்சியை சேர்ந்த ஐவர் திருகோணமலையில் நஞ்சு அருந்தி; 16 வயது சிறுமி உயிரிழப்பு

குடும்பப் பிரச்சினை காரணமாக திருகோணமலையில் பெண் ஒருவர் தனது நான்கு பெண் பிள்ளைகளுடன் இன்று (06.11.2020) விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
விஷம் அருந்திய மூத்த மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துவிட்டார் என்று உப்புவேலி பொலிஸார் தெரிவித்தனர். இக்குடும்பம் கிளிநொச்சியில் வசித்து வருகின்றது. பெண்ணின் கணவர் திருகோணமலை ஆனந்தபுரியில் வேலை நிமித்தம் வசித்து வருகின்றார். கணவர் திருகோணமலை ஆனந்தபுரி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் மெய்க்காப்பாளராக பணிபுரிந்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கோயிலின் மத நடவடிக்கைகளுக்காக ஆனந்தபுரி பகுதியில் தங்க கணவர் முடிவு எடுத்துள்ளார். இதனால் அவர் நீண்டநாட்களாக வீட்டிற்கு செல்லாமல் ஆனந்தபுரி பகுதியில் தங்கி வேலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து குறித்த பெண்ணும் தனது பிள்ளைகளுடன் திருகோணமலைக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக அவரது மனைவி தனது பிள்ளைகளுடன் தானும் நஞ்சு உட்கொண்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் என்.விதுசிகா (வயது-16) என அடையாளம் காணப்பட்டுள்ளா. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை; காரணத்தை நீதிமன்றத்தில் கூறிய பொலிசார்

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணத்தை பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.சமீபத்தில் பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்திருந்தது.தனது நடத்தையில் கணவர் ஹேம்நாத் சந்தேகப்பட்டதாலேயே சின்னத்திரை நடிகை...

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் கொள்ளை!

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரமத குருக்களின் வீட்டை உடைத்து கொள்ளையிட்ட ஆலய குரு ஒருவரை நேற்று இரவு கைது செய்துள்ளனர்.அத்துடன் அவரிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார்...

இலங்கையில் அனைவருக்கும் கட்டாய ராணுவப் பயிற்சி

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.இராணுவ பயிற்சி வழங்குவது குறித்து ஆராய்வதில் தவறில்லை எனவும், இராணுவ பயிற்சி...

Stay Connected

6,361FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை; காரணத்தை நீதிமன்றத்தில் கூறிய பொலிசார்

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணத்தை பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.சமீபத்தில் பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்திருந்தது.தனது நடத்தையில் கணவர் ஹேம்நாத் சந்தேகப்பட்டதாலேயே சின்னத்திரை நடிகை...

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் கொள்ளை!

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரமத குருக்களின் வீட்டை உடைத்து கொள்ளையிட்ட ஆலய குரு ஒருவரை நேற்று இரவு கைது செய்துள்ளனர்.அத்துடன் அவரிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார்...

இலங்கையில் அனைவருக்கும் கட்டாய ராணுவப் பயிற்சி

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.இராணுவ பயிற்சி வழங்குவது குறித்து ஆராய்வதில் தவறில்லை எனவும், இராணுவ பயிற்சி...

தேங்காய்களை திருடியவருக்கு நீதிவான் விடுத்த அதிரடி உத்தரவு!

காலி, ரயில் சேவையாளர்களின் உத்தியோகபூர்வ தங்குமிடங்கள் அமைந்துள்ள காணியில் உள்ள தென்னை மரமொன்றில் திருட்டுத் தனமாக 21 தேங்காய்களை பறித்ததாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேக...

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 621 பேர் சற்று முன்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 621 பேர் சற்று முன்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 47,215 ஆக...