கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக சில கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கிகாணப்படுகின்றன
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வண்ணாங்கேணி , புலோப்பளைமேற்கு கிராமங்களின் சில பகுதிகள் தற்போது வெள்ளத்தில் மூழ்கிக்காணப்படுவதுடன் வீடுகளிற்குள்ளும் வெள்ள நீர் உட்புகுந்து உள்ளது.
வெள்ளத்தினை வெளியேற்றுவதற்கு தமிழரசு கட்சி இளைஞரனி மற்றும் பச்சிலை பள்ளி பிரதேசபையும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.



