வயலில் பசளை இடுவதற்காகச் சென்ற வழியில் கருணா அம்மான் கிளிநொச்சிக்கு வந்ததை அறிந்து கருணாவைப் பார்க்கச் சென்ற விவசாயியை, தன்னைக் கொல்ல வந்த பயங்கரவாதி எனச் சந்தேகித்து கருணா பொலிஸாரிடம் மாட்டி விட்டுள்ளார். மேற்படி விவசாயியைப் பொலிஸார் கைதுசெய்து கொண்டு சென்றுள்ளனர்.
கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கிளிநொச்சிக்கு வருகை தந்து முரசுமோட்டைப் பகுதியில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். அதனை அறிந்த விவசாயி ஒருவர் வயலுக்குப் பசளை இட்டு விட்டுப் புல் அறுப்பதற்காக அரிவாளுடன் சென்ற வழியில் கரு கருணாவைச் சந்திப்பதற்காகச் சென்றுள்ளார். மேற்படி விவசாயி தன்னைக் கொல்லும் நோக்குடன் கூரிய ஆயுதத்துடன் வந்ததாகச் சந்தேகித்த கருணாவும் அவரது பாதுகாவலர்களான பொலிஸாரும் அவரைக் கைது செய்துள்ளனர்.
முரசுமோட்டை பகுதியில் தங்கியிருந்து மக்களைச் சந்தித்த கருணாவை சந்திக்கச் சென்ற நபரைக் கடமையில் நின்ற பொலிசார் சோதனைக்குட்படுத்திய வேளை அவரிடமிருந்து குறித்த புல்லறுக்கும் அரிவாள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விவசாயி கருணாவைக் கொல்ல வந்ததாகச் சந்தேகித்துக் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதகப் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
குறித்த கத்தி மற்றும் அரிவாள் ஆகியவற்றை வயலிற்குப் பசளை இடுவதற்காக எடுத்துச் சென்றதாகவும், வழியில் கருணா வந்ததை அறிந்து அவரைச் சந்தித்துச் செல்ல சென்றதாகவும் குறித்த விவசாயி குறிப்பிட்டுள்ளார்.