கிளிநொச்சி கோணாவில் பிரதேசத்தில் மேய்ச்சல் தரவை இல்லாமையாலும் எங்கும் நெற்பயிர்ச் செய்கை, பருவமழையால் சகல குளங்களும் நிரம்பியிருக்கின்றமையால் மேய்ச்சலுக்கு விட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனவே இதன் காரணமாக போதுமான உணவின்மையினால் இதுவரை எட்டு மாடுகள் இறந்து விட்டன. பல மாடுக்களுக்கு சேலைன் ஏற்றப்பட்டு கொண்டிருக்கிறது.
இவ்வாறு கறவை பசுக்கள் இறக்கும் நிலைமையையும் சேலைன் ஏற்றப்படுவதையும் அறிந்ததையடுத்து அப் பண்ணையாரிடம் நேரடியாக சென்று விசாரித்து நடைமுறை சாத்தியமான உடனடி மற்றும் நீண்டகால தீர்வுகளை யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் கால்நடை இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபருடன் பேசி பெற்று கொடுத்தார்.