கிளிநொச்சி ஏ-9 வீதியின் கரையோரமாக நின்ற பசு மாட்டை வேகமாகச் சென்ற டிப்பர் வாகனம் மோதியதால் அப்பசு கண்ணீர் விட்டுக் கதறி துடிதுடித்து உயிரிழந்துள்ளது.
கிளிநொச்சி நகர் பகுதியில் வீதியோரமாகச் சென்ற பசு மாட்டின் மீது ஏ-9 வீதியால் வேகமாகச் சென்ற டிப்பர் வாகனம் மோதித் தள்ளிவிட்டு நிற்காமல் வேகமாகச் சென்றுள்ளது.
டிப்பர் மோதியுள்ளமையால் பசு குற்றுயிராகக் கிடந்த நிலையில் அப்பகுதியால் சென்ற மனிதர்களைப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கதறி அழுதபடி துடிதுடித்து உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியால் சென்ற மனிதர்கள் பலரையும் கண் கலங்க வைத்துள்ளது.
ஏ-9 வீதியால் செல்லும் டிப்பர் வாகனங்கள் மிகவும் வேகமாகச் செல்கின்றமையால் இவ்வீதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இவ்வீதியில் பயணிக்கும் டிப்பர் வாகனங்களில் அகப்பட்டுப் அடிக்கடி பல பசுக்கள் உயிரிழக்கின்றமை குறிப்பிடத்தக்கது.





