கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்கு வரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து மீது வீதியின் அருகில் இருந்த பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில் பேருந்தின் மேற்பகுதி சேதமாகியுள்ளது.
கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி ஏ-9 வீதியால் சென்றுகொண்டிருந்த இ.பொ.ச பேருந்தின் மீது இன்று மாலை 6.00 மணியளவில் பொது வைத்தியசாலைக்கு முன்பாக நின்ற பாரிய மரம் பாறி விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து அவ்விடத்தால் சென்ற மக்கள் பொதுநலன் கருதி வைத்தியசாலையின் முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் வீதியில் சென்றவர்கள் என பலரும் உடனடியாகச் செயற்பட்டு வீதியை விட்டு மரத்தை அகற்றியிருந்தனர்


