களுத்துறை சிறைச்சாலை வளாகத்துக்குள் வீசப்பட்ட பொருட்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலைக்குள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்களே இவ்வாறு மதிலின் ஊடாக வீசப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி 4 தொலைபேசிகள், 7 சிம் அட்டைகள், கேரள கஞ்சா 10 கிராம், ஐஸ் போதைப்பொருள் 2 பெக்கட், புகையிலை 12 ஆகியன குறித்த பொதியில் காணப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த சம்பவம தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது