February 25, 2021, 4:02 pm

யாழ் பல்கலையின் விவசாய ஆராய்ச்சி,பயிற்சி தொகுதி வெள்ளி திறந்து வைப்பு

இலங்கையின் விவசாய அபிவிருத்தியை நோக்கிய விவசாய ஆராய்ச்சிகள் மற்றும் பயிற்சிகளை மேம்படுத்தும் முகமாக ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சுமார் 2,400 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் நிறுவப்பட்டுள்ள விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கட்டடத்தொகுதியானது நாளை மறுதினம் வெள்ளிக்கிழமைகாலை 10.30 மணியளவில் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா அழைப்பின் பேரில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கல்வி அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கே. கபிலசி. கே. பெரேரா மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க ஆகியோரின் பிரசன்னத்தில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகிராசு கியாமா ஆகியோரால் இக் கட்டடத் தொகுதி கூட்டாக திறந்து வைக்கப்படும். குறித்த வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமாகிய அங்கஜன் இராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் இராகவன் உட்பட அரசியல் பிரமுகர்கள், அரச திணைக்கள அதிகாரிகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் நலன் விரும்பிகள் எனபலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 2016 ஆம் ஆண்டு இலங்கை, ஜப்பான் அரசாங்கங்களுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட நிதியுதவி ஒப்பந்தம் ஒன்றிற்கமைவாக மேற்படி கட்டட தொகுதியானது அமைக்கப்பட்டுள்ளதுடன் விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகளுக்கு தேவையான நவீன ஆய்வுகூட உபகரணங்கள், தளபாடங்கள் மற்றும் இயந்திர உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளதுடன் அவ்வுபகரணங்களை உபயோகித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்வது சம்பந்தமாக விவசாயபீட விரிவுரையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கு பயிற்சிகளும் ஜப்பானிய பேராசிரியர்களினால் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ஜப்பானிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் வழங்கப்பட்டுள்ள நவீன ஆய்வுகூட வசதிகள் விவசாய பீடத்தின் பங்களிப்புடன் இலங்கையின் விவசாய அபிவிருத்தியில் முக்கியமாக வடபகுதியில் விவசாய அபிவிருத்திக்கு முக்கிய பங்காற்றவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

விடுதலை தொடர்பில் ரஞ்சனுக்கு வந்த அழைப்பு !

அரசாங்கத்தில் இணைந்தால், சிறையிலிருந்து விடுதலை செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்...

O/L பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

கொரோனாத் தொற்று பரவல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை வரும் மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் அது தொடர்பில் கல்வி அமைச்சர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.எதிர்வரும்...

சாத்தான்குளம் கொலை வழக்கு – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர்.அதன்பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

விடுதலை தொடர்பில் ரஞ்சனுக்கு வந்த அழைப்பு !

அரசாங்கத்தில் இணைந்தால், சிறையிலிருந்து விடுதலை செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்...

O/L பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

கொரோனாத் தொற்று பரவல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை வரும் மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் அது தொடர்பில் கல்வி அமைச்சர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.எதிர்வரும்...

சாத்தான்குளம் கொலை வழக்கு – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர்.அதன்பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2...

ஏப்ரல்21 தாக்குதல்:ஆணைக்குழு அறிக்கையை சுதந்திர கட்சி நிராகரித்தது

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை நிராகரிக்க ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவை: இலங்கை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

யுத்தம் நிறைவடைந்தப் பின்னர் இலங்கை தொடர்பாக நிலவுகின்ற விடயங்களில் இறுதியானதும், வினைத்திறனானதுமான தீர்வொன்றைக் தேடுவதற்கான அர்ப்பணிப்பின் ஊடாக நாம் வழிநடத்தப்பட வேண்டும் என்று இந்தியா அறிவித்துள்ளது.ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது...