யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் காணப்பட்ட போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் நினைவத்தூபி உடைத்து அகற்றப்பட்டதை கண்டித்து மாணவர்கள் நேற்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் இடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக போராட்டம் மேற்கொண்டு வரும் நிலையில் யாழ் இந்துக்கல்லூரி மாணவனும் இப்போராட்டத்தில் இணைந்துள்ளார்.
யாழ் இந்துக்கல்லூரி உயர்தர மாணவனிடம் வினவிய பொழுது கீழ் கண்டவாறு கூறினார்.
“இறந்த மக்களின் நினைவாக இருந்த தூபியை இடிச்சிருக்கிறாங்கள் என்னால தாங்க முடியேல்ல அதான் உண்ணாவிரதம் இருக்க வந்தனான்”
அம்மா அப்பாக்கு சொல்லிப்போட்டு வந்தனீங்களா என கேட்டபோது
” இல்ல நண்பணுக்கு மட்டும் சொல்லிற்று வந்தனான்”
உணர்வு மனதில் இருந்து வரவேண்டும்!
தனியே மாணவர்களது போராட்டமாக விடாமல் மக்களின் போராட்டமாக மாறட்டும் .